180
சுவடி இயல் அளபெடுக்காத வழி இயற்சீர் வெண்டளையாகித் தளை கெட வில்லையாயினும், அளபெடுத்து நிற்க வெண்சீர் வெண்டளையாகி ஏந்திசைச் செப்பலோசை பெறுவதால் இனிய ஓசை தரும் அளபெடையுடைய பாடத்தையே பரிமேலழகர் கொண்டுள்ளார். பிற இலக்கண அமைதிகளால் பாடம் தேர்ந்தெடுத்தல் வேற்றுமைத் தொகை - வினைத்தொகை
"எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே’6 2
வேறு: "எறிசுறவங் கழிகானல் இளங்குருகே'
எறிசுறவு அம்கழி மற்ற உயிர்களைத் தாக்குகின்ற சுறாமீன்களை யுடைய காண்டற்கு அழகிய உப்பங்கழி. கானல்-கடற்கரைச் சோலை, கழி+கானல் -கழிக்கானல்; உப்பங்கழியையடுத்த கடற்கரைச் சோலை. இரண்டன் உருபும் அதன் பயன்தரும் டைச் சொல்லும் தொக்க தொகை. இரண்டன் உருபு மட்டும் தொக்கி வந்ததாயின் 'விகாரத்து இயல்பு' (நன். 255)அமையு மாதலின், அணி கொணர்ந்தான், அணி பெற்றான் என்றாற் போல இயல்பாகப் புணர்தல் கூடும். இது உருபும் பொருளும் தொக்க தொகையாதலின் 'கழிகானல்' என்று கூறின் கழிந்த கானல், கழி கானல், கழியும் கான ல் என வினைத் தொகையாகப் பொருள் தர வாய்ப்பு ஏற்படும். எனவே இலக்கண மரபுக் கேற்றதும், பொருள் புலப்பாட்டில் மயக்கம் இல்லாததுமாகிய கழிக்கானல் என்பதே சிறப்புடைய பாடமாகிறது.
கின்ற
இல் உருபு
6
68
“கடிகொள் தென்றல் முன்றிலில் வைகும் கலிக்காழி வேறு : "கடிகொள் தென்றல் முன்றினில் வைகும் கலிக்காழி" முன்றில் என்பது பெயர்ச்சொல். இல் என்னும் இடப் பெயரோடு முன் என்னும் சொல் புணர இல்முன் என்றாகிறது. இ இதே சொற்கள் இடம் மாறிப்புணர்ந்து முன்-இல்-முன்னில் முன்றில்
என்று அமைந்து மரூஉச்சொல்லாகிறது. இலக்கணப் போலி
வேறு
என்பர். இல்லத்தின் முற்பகுதி என்ற பொருளில் வருவது. பாடாக வந்துள்ள 'முன்றினில்' என்பது பலபதிப்புகளில் காணப் முன்னுரை
சம்பந்தர் தேவாரம், 646. தேவாரம்,
62.
பக். 121-122.
63.
தேவாரம் முன்னுரை பக். 1111
தேவாரம் முன்னுரை பக். 122-123.