மூலபாட ஆய்வு
மடியுளாள்
மடியுளான்-முரண்தொடை
"மடியுளாண் மாமுகடி என்ப மடியிலான்
179
தாளுளாள் தாமரையி னாள்" (குறள்-617) பரிமேலழகர்
வேறு: "மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்” 6 1
மாமுகடி ஒருவன் மடியின்கண்ணே உறையும் என்னும் பரிமேலழகர் உரையில் ஒருவன் என்பது வரவழைக்கப்படுகிறது; மடி என்பதும் அவன் மடியாகிய இடத்தைச் சுட்டி அமைகிறது. ஆனால் பழைய
உரைகாரர் கொண்ட பாடத்தில் மடியுளான் - மடியிலான் ஆகிய இருவரின் தன்மைகளே சுட்டப்படுகின்றன. இப்பொருட் சிறப் போடு 'ஒரூஉ முரண்தொடை' நயமும் காணப்படுவதால் மடியுளான் என்பதைச் சிறந்த பாடமாகக் கருதமுடிகிறது.
யாப்பு - வகையுளி இல்லாத பாடம் தேர்தல்
சில
பாடல்களில் தளை சிதைந்து ஓசைகெடாதவாறு சீர்களை முறைப்படுத்திப் பதிப்பித்தல் வேண்டும். இம்முறையால் சொற்கள் இரண்டு சீர்களில் பிரிந்து நிற்பதுண்டு. இதனை வகையுளி என்பர். பொருட் சிறப்போடு உடைய சில பாடங்கள் இவ்வகையுளியை விலக்கி இயல்பான நடையமைய துணைபுரி அப்பாடங்களைத் தேர்ந்தெடுத்துள்ள முறைகளுக்கும்
கின்றன.
சில சான்றுகளைக் காட்டலாம்.
சேராதார்-சேராதவர்
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார்”
(குறள் - 10) (பரிமேலழகர்) (மணக்குடவர்)
வேறு: "இறைவனடி சேரா தவர்” பரிமேலழகர் கொண்ட பாடம் வகையுளியாய் அமைகிறது. பொருளமைப்பில் சிறிதும் மாறாமல் இயல்பாக அமையும் மணக் குடவர் கொண்ட பாடமே பழமையானது என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு வகையுளி இன்றியமையும் இயல்பான பாடங்களைத் தேர்ந்தெடுக்க இவ் எடுத்துக்காட்டு பயன்படும். யாப்பு - அளபெடையால் பாடம் தேர்தல்
கோலதூஉம்- கோலதும்
66
வேலன்று வென்றி தருவது மன்னன் கோலதூஉங் கோடா தெனின்” (†Ãôπ-546)
வேறு : கோலதுங் கோடா தெனின்”
(குறள் - 546) பரிமேலழகர்). (மணக்குடவர்)
61. திருக்குறள், பழைய உரை, உ.வே.சா. நூலகப்பதிப்பு