உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலபாட ஆய்வு

ல்

183

கொள்ளலாம், என்றாலும் திருமால் தன் அடியால் அளந்து கடந்த நிலம் எல்லாம் என்னும் பொருள் தரும் இவ்வடியில் நிலம் எல்லாம் என்று கூறுவதால் நிலம் பன்மையாகாது; எல்லாம் என்பது அவ்வொருமைக்கும் பொருந்தும். ஆதலின் தாயது ஆகிய நிலம் எல்லாம் என்ற பொருள் அமைப்பில் தாயது என்று கொள்ளுவதே பொருத்தமான பாடமாகும்.

முற்று - எச்சம்

-

9,71

'குரம்புகொண் டின்தேன் பாய்த்தினன்; நிரம்பிய " வேறு : குரம்புகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய"

பாய்த்தி நிரம்பிய என்பது வினை எச்சத் தொடராய் நின்று பொருள் தருகிறது. ஆயினும் இப்பாடலின் முன் பின் தொடர்கள் முறையே ஒடுக்கினன்; ஒல்லகில்லேன்; செய்தனன்; ஏற்றினன்; அமைத்தனன் என்பனவாகிய முற்று வினைகளையே கொண் டுள்ளன. ஆதலின் இவ்வடியிலும் முற்று வினைகொடுத்து மீண்டும் வேறு தொடரைத் தொடங்குவதே இலக்கணமுடையது ஆதலின் பாய்த்தினன் என்ற சொல்லையே பாடமாகக் கொள்ளவேண்டும். இலக்கணமுடையது - கொச்சைச்சொல்

"உம்பர்கட்கரசே... யோகமே! ஊத்தையேன் தனக்கு

வேறு : "......யோகமே! ஊற்றையேன் தனக்கு

என்று

ஊத்தையேன் என்பது கொச்சைச்சொல் என்றும் ஊற்றையேன் என்பதே இலக்கணமுடைய தூய சொல் என்றும் கொண்டு ஊற்றையேன் பதிப்பித்துள்ளனர். மலமுடையேன் என்னும் பொருள்தரும் தூய சொல் ஊத்தையேன் என்பதேயாகும். (ஊத்தை-அழுக்கு) ஊற்றை என்பது அப்பொருள் தருவதில்லை• அறிவுடைமை, ஆற்றல் என்னும் பொருள் தரும் ஊற்றம் என்பதன் திரிபேயாகும். எனவே ஊத்தையேன் என்பது இலக்கணமுடைய பாடமாகிறது.

5.முடிவு - மூலபாடம் - சிறந்த பாடம் : அகச்சான்று புறச் சான்றுகளும் இலக்கண அமைதிகளும் துணைக்கருவிகளாக அமையத் தேர்ந்தெடுக்கப்படும் பாடங்களையே மூலபாடம் என்று

உறுதிப்படுத்துகிறோம். ஆயினும்,

71.

திருவாசகம். திருவண்டப்பகுதி,வரி- 173. 72. திருவாசகம், பிடித்தபத்து-1,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/199&oldid=1571280" இலிருந்து மீள்விக்கப்பட்டது