உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

சுவடி இயல் 'அனைத்து மாறுபாடுந் திருத்தி ஆதிரூபங் காட்டுதல் இனி எத்துணை வல்லார்க்கும் அரிது

"பழைய காலத்து ஏட்டுப் பிரதிகள் அடைந்திருக்கும் ஈனஸ்திதியையும்...நோக்க அனேக வித்துவான்களாய் ஒருசபை சேர்ந்து ஒருவரோடொருவர் தீர்க்க ஆலோசனை செல்து... பதிப்பிப்பினும் பல வழுக்கள் புகுதற்கிடனாய இவ்வரிய நூலை’74

அதாவது

என்னும் சான்றோர் அனுபவக் கருத்தையும், இன்றைய தமிழ்ச் சுவடிகளை ஆய்வு செய்யும் அனுபவத்தையும் கொண்டு மூலபாடம் என்ற சொல்லைப் பற்றி ஒரு முடிவுக்கு வரமுடிகிறது. தமிழ்ச்சுவடிகளை ஆய்வு செய்து உண்மைத் தொடர்களைக் காண்பது அல்லது மூலபாடம் இதுவே என நிறுவுவது என்னும் கருத்து பொருந்தாது. கிடைத்துள்ள தமிழ்ச் சுவடிகளின் தலை முறையை நோக்கியும், சுவடிகளில் காணும் வேறுபாடுகளின் தன்மை, அளவு ஆகியவற்றை நோக்கியும் ஆய்ந்து பார்க்கும் பொழுது கிடைத்துள்ள பாடங்களில் பொருத்தமுடைய, சிறந்த

பாடம் எது என்பதை முடிவு செய்து தேர்ந்தெடுப்பதை

இவ்வாய்வின் முடிவாகக் கொள்ளலாமே தவிர மூலபாடத்தைத் தேர்ந்தெடுத்தோம் என்பது பொருத்தமுடையதாகாது.

பதிப்பாசிரியர் - ஆய்வாளர் : பொருத்தமுடையது, சிறந்தது என்று முடிவு செய்வதும் பதிப்பாசிரியரின், ஆய்வாளரின் கருத்தைப் பொறுத்தே அமைவதாகும். அதுவே முடிவு வேறொரு பதிப்பாசிரியருக்கு, ஆய்வாளருக்குப் பொருத்தமற்றதாகத் தோன்றியுள்ளது. அன்றியும் ஒரு பதிப்பாசிரியருக்கே ஒருநூலின் முதற்பதிப்புக்கும் மறுபதிப்புக்கும் இடையே இக்கருத்து வேறுபாடு தோன்றியுள்ளதை எடுத்துக் காட்ட முடிகிறது.

இரண்டு பதிப்பாசிரியர்கள் - அனந்தராமையர்-காசிவிசுவநாதன்

"ஊரில்கூறும் அம்பலும் பொய்யாகிய களவிற் கூட்டமும் நீங்க"

என்று பதிப்பித்த அனந்தராமையர் 'கனவிற் கூட்டமும் நீங்க’ என்ற வேறுபாடும் உண்டு என்று காட்டினார்.5 இவ்வுரையையே

73.

74.

வீரசோழியம், பதிப்புரை. (சி.வை.தா. பதிப்பு) தொல்,பொருள்,பதிப்புரை, பக். 28-29.

75. கலித்தொகை, 39 உரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/200&oldid=1571281" இலிருந்து மீள்விக்கப்பட்டது