உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலபாட ஆய்வு

185

கனவிற் கூட்டமும் நீங்க' என்று பதிப்பித்துக் 'களவிற் கூட்டமும் நீங்க' என்பதை வேறுபாடாகக் காட்டியது பாகனேரி வெளியீடு. (காசிவிசுவநாதன்)

இளமழையாடும்

குன்று’16

என்பதன்

சிறப்புரையாக,

கருத்தங்கிவந்து சூல் முதிர்ந்தற்கு, மலையில் பெய்கின்ற மழை என்பது தோன்ற இளமழை என்றாள்' என்னும் பாடத்தை வேறு பாடாகக் காட்டியது பாகனேரி வெளியீடு. இவ்வுரையையே 'மலையில் மேய்கின் ற மழை' என்று பதிப்பித்து, "மலையில் பெய்கின்ற மழை' என்ற வேறுபாடும் உண்டு என்று காட்டிய அனந்தராமையர், மேகம் மழையில் மேய்தல் என்பதைத் திருவிளை யாடல், இந்திரன் முடிமேல்-41ஆல் அறிக என்று தம் கருத்துக்கு ஆதாரமும் காட்டினார்.

இவ்வாறு இரண்டு பதிப்பாசிரியருக்கு இருவேறு பாடங்களும் கிடைத்துள்ளன. ஆனால் தேர்ந்தெடுத்த முறை மாறுபட்டுள்ளது. எனவே எ து சிறந்தபாடம் என்பதை முடிவுசெய்வது பதிப் பாசிரியரை அல்லது ஆய்வாளரைச் சார்ந்தது என்பது தெளிவா கிறது.

ஒரே பதிப்பாசிரியர் - உ. வே. சாமிநாதையர்

உ.வே.சாமிநாதையரின் சிலப்பதிகாரப் பதிப்புகள் இரண்டில் (1892 பதிப்பு, 1927 பதிப்பு) அமையும் இவ்வேறுபாட்டு மாற்றங் களையும் இங்கு சான்றாகக் காட்டலாம்,

வேறு :

வேறு :

வேறு:

77

"பாசவர் வாசவர் பன்னிண விலைஞரோடு பாசவர் வாசவர் மைந்நிண விலைஞரோடு" "பாசவர் வாசவர் பைந்நிண விலைஞரோடு" இது 1892 பதிப்புமுறை.

"பாசவர் வாசவர் மைந்நிண விலைஞரோடு”

பாசவர் வாசவர் பன்னிண விலைஞரோடு" பதிப்புமுறை.

"இடர்புக் குகுமின் விடையிழ்வல் கண்டாய்”78 இடர்புக் கிடுகு மிடையிழவல் கண்டாய்"

L

து 1927

என்பது இவ்வாறே இருபதிப்புகளிலும் மாற்றிப் பதிப்பிக்கப் பட்டுள்ளது. இக்காட்டுகள் ஒரே பதிப்பாசிரியர் பாடம் தேர்ந்

76. கலித்தொகை, 41.

77. சிலப்பதிகாரம், 5:26. 78. சிலப்பதிகாரம், 7:17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/201&oldid=1571282" இலிருந்து மீள்விக்கப்பட்டது