உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பும் அச்சும்

7. பதிப்புமுறை

“நூல்களைப் பதிப்பிப்பதில் ஆராய்ச்சி என்பதற்கு இட மில்லையே; ஏட்டிலுள்ளதை அப்படியே பதிப்பிடத்தானே வேண்டும் என்று சிலர் கருதுவர்... முதலாவது தமிழ் ஏடுகளில் எழுதப்பட்டிருப்பனவற்றை வாசிப்பதே மிக்க சிரமமான வேலையாகும். உதாரணமாக, பொன் என்பதை - பொன், போன,பேரன் என்று வாசிக்கலாம். இதை நிச்சயப்படுத்தப் பொருளுணர்ச்சி,

வேண்டும்...

செய்யுளோசையுணர்ச்சி

'யாரினு மினியன் பேரன் பினனே' என்பதை 'யாரினு மினியன் போன பின்னே'

1

இருத்தல்

என்று அச்சிட்டனர்”1 சுவடியின் தன்மையை உணர்த்தும் இக் கூற்று பதிப்பின் அருமையை எடுத்துக் காட்டுகிறது. சுவடியின் தன்மை ஒருபுறமிருக்க, பொதுவாக அச்சிடுதல் என்பது பதிப்பித்தல் என்பது வேறு என்பதையும் அறிய வேண்டும்.

வேறு;

"இப்பதிப்பில் பலவான புதிய பாடங்களை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். யாவும் திருத்தமான

பாடங்கள்.

அந்த வகையில் இதுவே சிவக்கொழுந்து தேசிகருடைய பதிப்புக்குப் பிறகு முதன் முதலாக வந்த பதிப்பு. மற்றவை யாவும் மறு அச்சுக்களே; பதிப்புக்கள் அல்ல’2

என்பது இவ்வுண்மையைத் தெளிவுபடுத்தும்.

1. தமிழ்ச் சுடர் மணிகள், பக். 316. 2. திருவாசகக் குறிப்புக்கள், பக். 156

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/203&oldid=1571284" இலிருந்து மீள்விக்கப்பட்டது