உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

சுவடி இயல் என்ற

திருத்தமான பாடம்: இங்குத் திருத்தமான பாடம் தனால் மூலபாடத்தைத் திருத்தி, மாற்றிப் பதிப்பிப்பது என்பது பொருளன்று. ஒரே சுவடி அல்லது ஒருசில சுவடிகளைக் கொண்டு வெளியிடும் ஒரு பதிப்பைக் காட்டிலும், பல சுவடிகளை ஆய்ந்து திருத்தமான, சிறந்த பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பிப்பதே திருத்தமான பாடமுடைய பதிப்பு ஆகும். ஒன்றிரண்டு ஏடு களைப் பார்த்துப் பதிப்பிக்கும்போது, முன் இயல்களில் கூறிய வாறு, பார்த்த ஏடுகளில் பிழைகள் இருந்திருக்கக் கூடும்; ஏட்டைப் படிப்பதிலும், ஏட்டிலிருந்து படியெடுப்பதிலும் பிழை நிகழ்ந் திருக்கக் கூடும். பல சுவடிகளை ஒப்பிடுவதில் அப்பிழைகள் திருத்தம் பெற்றுத் திருத்தமான பாடம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். அவ்வாறு கிடைக்கும் பாடமே திருத்தமான ஆகிறது.

66

பாடம்

'திருத்தமான பாடம் என்று நாம் பேசும்போது திருத்தப் பட்ட பாடம் என்று யாரும் கருதாமல்... ஏடுகளில் உள்ள செம்மையான உண்மைப் பாடம் என்று அன்பர்கள் கருது வார்களாக 8

என்னும் கருத்து இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாகும்.

.

பதிப்பிக்கும் நூல் : சுவடிகளிலிருந்து பதிப்பிக்கத் தேர்ந் தெடுக்கும் நூல் இரண்டு வகையில் அமையும். ஒன்று இதுவரை அச்சாகாத நூல். மற்றொன்று எப்போதோ அச்சிடப் பெற்றது ஆயினும் இன்று கிடைக்காத நூல். இக்காலத்துக் கிடைப்பதாயி னும் பலவகைத் திருத்தங்களோடு கூடிய ஆராய்ச்சிப் பதிப்பாக வெளியிடத் தகுதி வாய்ந்ததாகவும் இருக்கும். கிடைக்கும் சுவடி யில் காணப்பெறுவது அச்சாகாத நூல் என்று எப்படி அறிவது? தமிழ் நூல்களைச் சார்ந்தவரை இக்கண்டுபிடிப்பு மிகக் கடினமான தாக அமைகிறது.

நூலகங்

அச்சாகாத நூல்' என்று அறியும் வழி: இச்சுவடியில் உள்ள நூல் இதுவரை அச்சாகவில்லை என்பதை முதலில் பதிப்பாசிரியர் அல்லது ஆய்வாளரின் பட்டறிவின் மூலம் அறியலாம். களிலுள்ள நூல் பட்டியல்களை ஆய்ந்து பார்த்து அப் பெயருடைய நூல் வெளியாகியுள்ளதா எனக் கண்டறியலாம். நூலகங்களில் காணும் முறையில் அந்தந்தத் துறையில் அமைந்துள்ள நூலகங்

3. திருவாசகக் குறிப்புக்கள், பக். 162.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/204&oldid=1571285" இலிருந்து மீள்விக்கப்பட்டது