உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

சுவடி இயல் வேண்டும்; திரட்டுவதோடு பதிப்பிக்க முனைதல் வேண்டும்; பதிப்பிப்பதில் நிறுவனங்களுக்கு உள்ள சிக்கல்கள் அகற்றப்பெற வேண்டும். திரட்டும் சுவடிகள் எல்லாம் ஒரே இடத்தில் வைக்கப் பட வேண்டும் என்னும் கருத்துஏற்புடைய ஒன்றாகும்.

நுண்நிழற்படம் எடுத்து வைக்கப்பட்டு வேண்டிய

பிற

நிறுவனங்கள் அவற்றைப் பயன்படுத்தலாம். ஒரே பணியை இருவேறு நிறுவனங்கள் மேற்கொள்ளாதவாறு தவிர்க்கப்படலாம். மருத்துவச்சுவடி : சுவடி கிடைக்கும் எல்லா இடங்களிலும் மருத்துவச் சுவடி ஒன்றேனும் இல்லாத இடம் இல்லை எனலாம். கொடுக்க மறுக்கும் அவற்றையும் பெருந் தொகையின் மூலம் பெறலாம். மருத்துவச் சுவடிகளை வகைதொகை செய்து, நோய் வாரியாக, மருந்துவாரியாகத் தொகுத்து வெளியிடுவது, வளர்ந்து வரும் சித்த மருத்துவத் துறைக்குப் பெரிதும் துணையாக இருக்கும். தமிழ்நாடு சித்த மருத்துவக் குழுவின் மூலம், அண்ணா மருத்துவ மனை (சென்னை)யில் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சை, சரசுவதி மகால் நூல்நிலையம் சரபேந்திர வைத்திய முறைகள்' என்னும் வரிசையில் பல நூல்களை வெளியிட்டு வழிகாட்டியுள்ளது.

பல சுவடிகளிலும் காணப்படும் ஒரு நோய்க்குரிய மருத்துவத் தொகுப்பாக, 'கண் மருத்துவம்' என்னும் அரிய நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு இம்முறையில் வழிகாட்டி யுள்ளது. அதேபோல பல சுவடிகளிலும் காணப்பெறும் ஒரு மருந்தின் தொகுப்பாக, 'கற்பங்கள்' என்ற நூலையும் அந்நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இதுவும் ஒரு வழிகாட்டும் பதிப்பாக

விளங்கும்.

தொகுப்புப் பதிப்பு -வழிகாட்டி: சகுனங்களின் பயன், மனை கோலும் முறை, கதவு இலக்கணம், பொருத்த வகைகள், பொருத்தப் பலன்கள் என்ற தலைப்புகளில் தனித்தனியே இருந்த சுவடிகளைத் திரட்டி, வீடு கட்டுவதற்கான அனைத்துச் செயல் களுக்குரிய இலக்கணங்களைத் தொகுத்து 'மனைநூல' என்னும் பெயரில் ஒரே நூலாக வெளியிட்டுப் பயன்படச் செய்தது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்; தொகுப்புப் பதிப்பு என்ற தலைப்பில் கூறியவாறு பல சிற்றிலக்கியங்களையும் தொகுத்து வெளியிட் டுள்ளது அந்நிறுவனம்.

2.

எண்பத்தொன்றில் தமிழ், பக். 471.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/292&oldid=1571376" இலிருந்து மீள்விக்கப்பட்டது