உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சு

275

கிறார்கள். ஒருவர் உள்ளே செல்லும்போது யார் சும்மா இருக்கிறார்களோ அவர்களிடம் பணி ஒப்படைக்கப்படுகிறது.

வடார்க்காடு மாவட்டம் வேலூர், வந்தவாசியை யடுத்த நாவல்பாக்கம் ஆகிய

கிறது.

இடங்களில் இதே சோதிடம் நடைபெறு

நாவல்பாக்கம் சோதிடர் சிறிது உண்மையாக நடந்து கொள்ளுகிறார். நம்முடைய விவரங்களைப் பெற்று வைத்துக் கொண்டு பலநாள் அலைக்கழிக்கிறார். இன்னும் கிடைக்கவில்லை என்று கூறிவருகிறார். இறுதியாக ஒரு சுவடிக் கட்டை எடுத்து வைத்திருந்து, அதில் சில ஏடுகளைப் பிரித்து நம்மிடம் கொடுத்து விடுகிறார். அதுதான் நம்முடைய சோதிடம். நாமே எழுதிக் கொள்ளலாம். அல்லது அங்கு இருக்கும் சுவடி எழுதுவோரிடம் கொடுத்து எழுதிக் கொடுக்கச் செய்யலாம்.

சென்னை,தியாகராயநகர், அகத்தியர் ஆலத்தில் ஒரு அறை ஒதுக்கப்பட்டு 'அகத்தியர் நாடி சோதிடர் Ꮒ என்னும் பெயரில் சோதிடம் சொல்லப்பட்டு வருகிறது. அங்கு 'மாணிக்கவாசகர் அம்மானை என்னும் இலக்கியச் சுவடியை வைத்துக்கொண்டு, அதில் சில ஏடுகளைப் புரட்டிச் சோதிடப் பாடல்கள் படித்துக் காட்டப்படுகின்றன. பிறகு விளக்கமும் கூறப்படுகின்றன. ஓய்வு பெற்ற ஐ. ஏ. எஸ். அதிகாரி ஒருவருக்கும். மருத்துவர் ஒருவருக்கும் அந்தச் சுவடியின் நிலையை எடுத்துக் காட்டியிருக்கிறேன். அவர்கள் அந்தச் சோதிடத்தில் மிகுதியாக ஈடுபாடு கொண்டிருந்

தார்கள். சென்னையில் இதே நிலையில் பல இடங்களில் சோதிடம் நடைபெறுகிறது.

இச்

ச்சுவடிகள் பயன்பட: சுவடி உரிமையாளர்கள் வாயைப் பிளக்கும் அளவில் பெருந் தொகையைக் கொடுத்து அவற்றைப் பெற்றுவர வேண்டும். எல்லா இடங்களிலும் உள்ளவற்றைத் திரட்டி ஓரிடத்தில் சேர்க்க வேண்டும். அக்கலை வல்லுநர் சிலரையும் அழைத்துப் பணியில் அமர்த்தி, எல்லாவற்றையும் இலக்கணவாரியாகப் பிரித்துத் தொகுத்து வெளியிட்டால் தமிழரின் சோதிடக்கலை பலருக்கும் பயன்படும். அயல்நாட்டவரும் வியக்கும் வண்ணம் அக்கலை சிறப்புற்று நிலைக்கும். இப் பணியைத் தமிழக அரசு, தனியார் நிறுவனம் ஆகியவையே மேற் கொள்ள இயலும்.

திரட்டுதலில் ஆர்வமுள்ளவர்கள் நிறுவனங்களில் நியமிக்கப் பெறுதல் வேண்டும்; அவர்களுக்கு முழு உரிமையும் அளிக்கப்பெற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/291&oldid=1571375" இலிருந்து மீள்விக்கப்பட்டது