உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

சுவடி இயல்

ஆகியவை

2.

3.

ஜெயராமன் - சுவடி சோதிடர், அரசு மருத்துவமனைச் சாலை, வயித்தீசுவரன்கோயில்.

இராமதாஸ்-நாடி சோதிடர், வடக்குத் தெரு,

சுவாமிமலை.

சிலரின்

முகவரிகள். மருத்துவமனைச் சாலையில் விளம்பரப் பலகை போடப்பட்டுள்ள சோதிட நிலையங்கள் பல உள்ளன.

சோதிடமுறை : கையின் பெருவிரலைப் பார்த்து-மலர்ச்சுழி- புள்ளி ; இரட்டைச்சுழி இருபுள்ளி; நேர்க்கோடு-பலபுள்ளி என்பன போன்ற குறிப்புகளை எடுத்துக் கொள்ளுகிறார்கள். சிறிது நேரங்கழித்து ஒரு சுவடியைக் கொண்டு வருகிறார்கள். நம்மிடமே பல கேள்விகளைக் கேட்டுவிட்டுப் பல ஏடுகளை ஒவ்வொன்றாய்த் தள்ளிவந்து ஓர் ஏட்டில் நின்று இதுதான் உங்கள் சாதகம் சாதகம் என்று முடிவெடுக்கிறார்கள். பிறகு பொதுக் காண்டத்திற்கு ரூபாய் அறுபது என்று பணம் வாங்கிக்கொண்டு பத்து முதல் பதினைந்து வரையிலான பாடல்களை எழுதித் தருகிறார்கள். பிறகு கல்வி, திருமணம். மக்கள் போன்ற காண்டங்களுக்குத் தனித்தனியே ரூபாய் ஐம்பது, நாற்பது என்று வாங்குகிறார்கள்.

நான் நண்பர் ஒருவரை அழைத்துச் சென்று (திரு.செயராம சோதிடரிடம்) அவர்கள் முறையிலேயே பணம் கொடுத்து ஒரு காண்டத்தை எழுதிப் பெற்றேன். நண்பர் என்னைப் பற்றி அவரிடம் கூறிவிட்டார். பிறகு சோதிடர் என்னிடம் சுவடியைக் காட்ட மறுத்துவிட்டார். மீண்டும் ஒருநாள் பூசைமுத்து சோதிடரிடம் சென்றோம். அவ்வாறே எழுதத் தொடங்கினார் அருகில் அமர்ந்து சுவடியைப் பார்க்க முடிந்தது. அவரிடம் என்னைப் பற்றிச் சொல்லவில்லை மேஷம், குரு, மூன்றில், ஐந்தில் என்பனவாகிய சில சொற்களும் தொடர்களும் அது சோதிடச் சுவடியே என்பதை உறுதிப்படுத்தின. ஆனால் அவர்கள் அதைப்பார்த்து, அதில் உள்ளதை எழுதுவதாகத் தோன்றவில்லை, எழுதுபவர் ஒருமுறை சுவடியை நிமிர்ந்து பார்த்துக்கொள்ளுகிறார். அவ்வளவுதான். இரண்டு மூன்று வரிகளைப் பாடலாகச் சொல்லிக்கொண்டே எழுதிவிடுகிறார்.

இவ்வளவும் அந்தந்தப் பெயருடைய சோதிடர்களே செய்வ தில்லை. சுமார் இருபது வயது முதல் பலர் அங்கு பணியாற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/290&oldid=1571374" இலிருந்து மீள்விக்கப்பட்டது