உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சு

273

முதற்குறிப்பு : பாட்டு முதற்குறிப்பு (அகர வரிசையில்) தருவதாயின் பாட்டின் தொடர் எண்ணைக் கொடுப்பதே சிறந்த முறையாகும். இதனால் ஒருபக்கத்தில் இடம்பெறும் பல பாடல் களில் ஒன்றினை எளிமையாகக் காணமுடியும். மேலும் இம் முதற் குறிப்பினை அச்சுக்கு அளிக்கு முன்பே தயாரித்து முழுமையாக்கி விடவும் முடியும். பக்க எண் கொடுப்பதாயின், பக்கங்களாகப் பிரிக்கப்பட்ட அச்சுப்படி வந்தபிறகே செய்ய முடியும்.

5

விளக்கக் குறிப்பு : பாடலுக்கும் உரைப்பகுதிக்கும் பதிப் பாசிரியர் விளக்கம் கொடுக்க நேர்ந்தால், அவ்விளக்கம் பிற அகராதியையோ நூலையோ பார்த்து அறியுமாறு அமையக் கூடாது, அவ்வாறு அமைந்தால், அந்த நூலின் கருத்தோட்டம் தடைபடும்; கவனம் வேறு நூலில் மாறும்.

சுவடி நிலை : பலவிடங்களில் சிதறிக் கிடக்கும் சுவடிகள் ஓரிடத்தில் திரட்டி வைக்கப் பெறவேண்டும். இதற்கு உரியோர் இரு திறத்தினரேயாவர். பெருஞ் செல்வந்தர் முயன்றால் பெருந் தொகை செலவிட்டு இப்பணியை மேற்கொள்ளலாம். இல்லையேல் அரசு தனிப்பட்ட ஊக்கம் காட்டி இச்செயலை முடிக்கவேண்டும். தமிழ்நாடு அரசு ஊக்கம் காட்டுவதன் மூலம், தமிழ்நாடு தொல் பொருள் ஆய்வுத்துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பண்பாட்டுத்துறை ஆகிய நிறுவனங்கள் சுவடி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.

களப்பணியில் கண்ட சுவடிகள் : 1. கோவை மாவட்டத்தில் பலரிடத்திலும் ஒன்றிரண்டு சுவடிகள் உள்ளன. பெரும்பாலும் சிற்றிலக்கியங்கள்; மருத்துவச் சுவடிகள். அறிஞர் ஒருவர் தம் இல்லத்திலிருந்த சுமார் 350 சுவடிகளைப் பேரூர், சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரிக்குக் கொடுத்திருக்கிறார். பலர் 'முன்னோர் சொத்து' என்று கூறிக் கொடுக்க மறுக்கின்ற நிலை காணப்பட்டது.

2. தஞ்சை மாவட்டம், வயித்தீசுவரன்கோயில், சுவாமிமலை ஆகிய இடங்களில் பலரிடம் ஆயிரக் கணக்கான சோதிடச் சுவடிகள்

உள்ளன

1.

பூசைமுத்து-சுவடி சோதிடர் (கோயிலுக்கு அருகில்) வயித்தீசுவரன்கோயில்.

சுவ,-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/289&oldid=1571373" இலிருந்து மீள்விக்கப்பட்டது