உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

1

கிடக்கும் புலவனது கருத்தோட்ட த்தைக் தெளிவுக்கு நல்லது'. நல்ல பாடத்தைத் சுவடியின் முழுப்பார்வை தேவைப்படுகிறது.

சுவடி இயல் காண்பதுகூடத் தேர்ந்தெடுக்கவும்

அந்தாதிமுறை : சுவடி தேடியும். பிற செயல்களுக்காகவும் வெளியில் செல்லும்போது மாணாக்கர், தாங்கள் மனப்பாடம் செய்த பாடல்களைச் சொல்லிக் கொண்டு செல்வர். ஒருவர் சொல்லிய பாடலின் இறுதிச் சொல்லை முதலாக உடைய வேறு பாடலை மற்றொருவர் சொல்லுவார். இவ்வாறு சொல்லிப் பழகுவது வழக்கம். இம்முறைக்கு ஏற்றதாக மருத்துவம், சோதிடம் ஆகிய நூல்களின் நடை அந்தாதி யாப்பில் அமைந் துள்ளது. பதிப்பில் செய்யுள் தொடச்ச்சியை அறிய இந்த யாப்பு முறை பயன்படுகிறது.

பலவகை ஆற்றல்: பதிப்பு உயர்ந்ததாகவும்

பலவகைச்

செய்திகள் நிரம்பியதாகவும் உருவாக, பதிப்பாசிரியர் பலவகை நூலறிவு நிரம்பியவராகவும், உலக மரபு அறிந்தவராகவும் விளங்க வேண்டும்; அவ்வறிவு முழுமையாகப் பயன்படுமளவிற்கு நினை வாற்றல் உடையவராகவும் விளங்கவேண்டும். நினைவாற்றல் குறைந்திருப்பினும், தாம் பெற்ற அனுபவங்களைத் தொகுத்து வைக்கும் ஆற்றலுடையவராகவேனும் இருத்தல் வேண்டும். பதிப்பாசிரியர் அறிஞர் பலரையும் நாடிச் சென்று கருத்துக்களைத் திரட்டுவதில் முனைப்பு உடையவராதல் வேண்டும். இதனால் பல செய்திகள் பதிப்பில் இடம்பெறுவதோடு பிழையற்ற பதிப்பா கவும் அமையும்.

உரை: : நூலுக்கு உரை கிடைக்காத பகுதிகளைப் பதிப் பாசிரியர் நிறைவு செய்யலாம். அப்பகுதிகளை அடைப்புக் குறிக்குள் காட்டவேண்டும். அதேபோல மூலப்பகுதியையும்

முழுமைப்படுத்தலாம்.

முன்பதிப்பு : தம்முடைய பதிப்பிற்குமுன் வேறு பதிப்பு களிருப்பின் அவற்றின் தன்மைகளைச் சுட்டிக் காட்டவேண்டும். முன் பதிப்பு இருக்க இப்பதிப்பினைத் தொடங்கிய காரணத்தை யும் சுட்ட வேண்டும்.

படம் : நூல் செய்திகளுக்கேற்பக் கைப்படம் அல்லது நிழற் படங்களை அமைத்து விளக்கம் பெறச் செய்யலாம்.

1. ஐவர் அம்மானை, (எடுத்துக்காட்டு), பக்.74.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/288&oldid=1571372" இலிருந்து மீள்விக்கப்பட்டது