உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சு

271

நூலைக் கையில் எடுத்துப் பிரிக்கும் போது காணப்பெறும் உட்புறக் கவர்ச்சி நூலைப் படிக்கத்தூண்டுகிறது. எழுத்து வேறு பாடுகளால் அமையும் தெளிவும், அழகான அச்சும் உட்புறக் கவர்ச்சியூட்டுவனவாகும். அதோடு மை மிகுதியாகக் கொட்டாமல் இருத்தல் வேண்டும். மை சரியாகப் படியாமல் எழுத்துத் தெளிவின்றி இருப்பது அழகைக் கெடுக்கும். தேய்ந்த எழுத்து களால் மொத்தையாக விழாமல் ஒரே சீரான தெளிவும் தூய்மையு மான எழுத்துகளால் பதிப்பு அமைவது அழகான அச்சுக்குரிய வரிகள் நெருக்கமின்றி விளங்குவது தெளிவை

குணங்களாகும். மிகுதிப்படுத்தும்.

கண்காணிப்பின்

திறத்தினால்

முடிவு : சுவடிப்பதிப்பு என்பது பதிப்பாசிரியரின் அச்சுமுறைக் சிறப்புற்று விளங்கும். தாள், அட்டை, எழுத்து, கட்டமைப்பு ஆகியவற்றின் உயர்வுகள் பதிப்பு முறையின் ஆழ்ந்த கருத்துகளோடு இணையும் போதுதான் நூல் முழுமையான சிறப்பைப் பெறுகிறது.

இ. நிறைவுரை

சுவடி இயல் என்பது பழந்தமிழரின் கருத்துகளை வெளியில் கொண்டுவரும் ஒரு கலையாகும். அக்கருத்துகள் பொதிந்து கிடக்கும் சுவடிகளைப் படிப்பதற்குப் பல கையெழுத்துகளில் பயிற்சியும், பழைய எழுத்து முறைகளில் தேர்ச்சியும் தேவைப்படு கின்றன. சுவடி இயற் கல்வி இப்பயிற்சிகளைப் பெறத் துணை செய்கிறது. அழியாமற் காக்கும் ஒரு கலையாகவும் விளங்குகிறது.

வழிகாட்டிகள் : பழைய பதிப்பாசிரியருக்குப் புரியாத நிலை யில் துணை துணை எதுவும் இல்லை. புதிய வழிகளைக் காண்பதில் அல்லலுற்றனர். இக்காலப் பதிப்பாசிரியருக்கு அவர்கள் காட்டிய வழிகள் துணைநிற்கின்றன. ஒற்றையடிப் பாதையே பாதையே யாயினும் தேய்ந்த வழி கிடைக்கிறது. அவ்வழியை நல்ல சாலையாக மாற்றச் சுவடி இயல் பயிற்சி துணை செய்கிறது.

முழுப்பார்வை: சுவடிகளில் காணும் சிக்கல்களைத் தீர்க்க இப்பயிற்சி துணைசெய்கிறது. சுவடியில் காணும் எழுத்து முறை களை அறியவும், சிறந்த பாடங்களைத் தேர்ந்தெடுக்கவும் சுவடி முழுமையும் நோக்க வேண்டும் என்பதைப் புலப்படுத்துகிறது. எழுதுவோரின்

கையெழுத்து முறை, பிழை உருவாகும் வகை, கூட்டெழுத்து முறை ஆகியவற்றைத் துணிய, சுவடி முழுமையும்

மேற்போக்காகக் காணவேண்டும். "பல பாடல்களில் ஓடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/287&oldid=1571371" இலிருந்து மீள்விக்கப்பட்டது