உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

விலை நிர்ணயம் :

நூலின்

சுவடி இயல் உற்பத்திச் செலவுகளோடு விற்பனையாளர்களுக்குத் தரும் கழிவுத்தொகையும் பதிப்பாசிரிய ருக்குரிய இலாபத்தொகையும் சேர்த்து விலை நிர்ணயித்து, விலை யினைத் தெளிவாக அச்சிடவேண்டும்.

விற்பனை:

தரமான பதிப்பேயாயினும்

குறைந்த விலை யுள்ளதாய் இருந்தால்தான் மிகுதியாக விற்பனையாகும். குறைந்த விலை நிர்ணயிக்க நூலின் எண்ணிக்கையை அதிகமாக்கவேண்டும். அதாவது சுமார் முந்நூறு பசக அளவுள்ள ஒரு நூலை அச்சிடுவ தாகக் கொள்ளுவோம். ஆயிரம் படிகள் அச்சிடச் சுமார் பத்தாயிரம் ரூபாய் செலவாகும். ஒரு படியின் அடக்க விலை பத்து ரூபாய் ஆகும். அதே நூலை ஐயாயிரம் படிகளாக வெளியிடச் சுமார் முப்பது ஆயிரம் செலவாகும். ஒரு படியின் அடக்கவிலை ஆறுரூபாய் ஆகும். நல்ல இலாபத்தோடு நூலின் விலையை நிர்ணயிக்கலாம். அவ்வளவும் விற்கவேண்டும்; தக்க விளம்பரமும் அரசின் ஆதரவும் இருக்குமாயின் விரைவில் விற்பனையாகும்.

தாள் தேர்ந்தெடுத்தல் : அச்சுக்குரிய தாள்கள் இன்றைய நிலையில் ஐந்து வகையான அளவுகளில் கிடைக்கின்றன. நூலின் பொருள், பக்க அளவு ஆகியவற்றிற்கு ஏற்ப நூலின் அகல நீளம் அமையுமாறு தாள்களைத் தேர்ந்தெடுத்தல் நல்லது,

வலது

ஓர இடைவெளி : ஒவ்வொரு பக்கத்தின் நான்கு ஓரங்களிலும் வெற்றிடம் விடுவது அழகான அமைப்பிற்காக மட்டுமன்று. இடது ஓரம் (முதுகு) தையல் வரும் பக்கம்; 1. 2. செ.மீ. (') இடம் டம் விட்டால் போதும். தலைப்பக்கம் நூல் தலைப்பு, பக்கஎண் ஆகியவை வரும்; 1.5 செ.மீ. இடம் விடுதல் வேண்டும். ஓரத்தில் குறிப்புகள் எழுதிவைக்கலாம்; கையாளும் பக்கம் ஆதலின் தாள் அழுக்கடையும்; சிதைவுறும்; எனவே 2 செ.மீ. இடம் விடுதல் வேண்டும். அடிப்பக்கம் குறிப்புக்களுக்குப் பயன்படுவதோடு கீழே தட்டப்பட்டுத் தேய்வுறும் பகுதி ஆதலின் 2.2. செ. மீ. இடம் விடுதல் வேண்டும். நான்கு பக்கமும் ஒரே அளவு இடம் விடுவது அழகும் பயனும் இல்லாததாகும்.

கட்டமைப்பு : நூலின் சுவர்ச்சியே நூலைப்படிக்கத் தூண்டு கிறது. அக்கவர்சசியானது அகக்கவர்ச்சி, புறக்கவர்ச்சி என

இருதிறப்படுகிறது. கையாள

வசதியான அளவும், சிறந்த

கட்டமைப்பும் புறக்கவர்ச்சியூட்டுவன. அவையே நூலை எடுத்துப் பார்க்கத்துண்டுவன. எனவே பதிப்பாசிரியர் சிறந்த கட்ட மைப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/286&oldid=1571370" இலிருந்து மீள்விக்கப்பட்டது