உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சு

அச்சுப்பிழை : பொதுவாக

269

நூல்கள் பிழையின்றி இருப் பதையே அனைவரும் விரும்புவர். தரமான நூல் என்பது பிழை யின்றி முன்மாதிரியாகவும் விளங்க வேண்டும். இதற்கு முழுமை யாகப் பதிப்பாசிரியர் பொறுப்புடையவராகிறார், எழுத்துகள் விட்டுப் போவதும், மாறுவதும் இயல்பாக நிகழக்கூடியவை. இவற்றில் கவனமே மிகவும் முக்கியம்.

ன்பம்...என்னும்

அறத்தான் வருவதே இன்பம்... என்னும் தொடரில் றகரம் விடுமாயின்; தங்கள் வரவை விரும்பும், பெண்ணின் தாய் மாமன்மார்...என்பதில் தாய் என்பதிலுள்ள தகரம் நகரமாக மாறுமாயின்; வாழ்த்துமாறுகோருகிறோம் என்பதில் 'ரு' 'று'வாக மாறுமாயின் எவ்வாறாகும் என்பதை நோக்க வேண்டும். இவ்வாறான விபத்துகள் பதிப்பில் நிகழாவண்ணம் அச்சுப் படியினைத் திருத்த வேண்டும். இவ்வாறே எண்களில் மாற்றம் ஏற்படுவதுண்டு. 1974இல் நமது நாடு சுதந்திரம் பெற்றது என்பது போல எண்கள் மாறி இடம் பெறக்கூடும். இத்தகு பிழைகள் மிகவும் நுணுக்கமாகப் பார்த்துத் திருத்தப்பெற வேண்டியவை யாகும். பிழைதிருத்தக் குறியீடுகள் இணைப்பு 1இல் தரப் பட்டுள்ளன.

ஆ. சொந்தப்பதிப்பு

பொதுவாகச் சுவடிப் பதிப்பில் நால்வர் ஈடுபடுவர். 1. சுவடிக் குரியோர் 2, பதிப்பாசிரியர் 3. அச்சிடுபவர் 4. விற்பனையாளர் என்போர் அந்நால்வர். இந்த நால்வரும் ஒருவராக அமையும் நிலையே சொந்தப் பதிப்பு நிலையாகும். சுவடி, பதிப்பு, அச்சு, விற்பனை ஆகிய நான்கு பணிகளையும் ஒருவரே மேற்கொள்ளும் போது, பொதுவான சில செய்திகளை மனங்கொள்ள வேண்டும்.

சுவடித் தேர்வு: மக்களின் தேவை, சுவை, நூலின் அளவு, வாங்கும் சக்தி ஆகியவற்றை உள்ளத்திற்கொண்டு சுவடியினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஏற்ற

செலவு : தேர்ந்தெடுத்த சுவடியினைப் படியெடுப்பது முதலாக அச்சிடுவது ஈறாக ஆகும் செலவினங்களை ஆய்ந்து பார்க்கவேண்டும். உரிய சுருவிகள், துணைக்கருவிகள் ஆகிய வற்றைத் திரட்டுதல், படங்கள் முதலான எடுத்துக் காட்டுகள் திரட்டுதல், அதற்கான பயணச்செலவுகள் ஆகிய பலவகைச் செலவினங்களும் நூல் உற்பத்தி அல்லது நூல் பதிப்புச் செலவினங் களாகவே கருதப்பெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/285&oldid=1571369" இலிருந்து மீள்விக்கப்பட்டது