உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சு

279

ஆகியும் அவற்றைப்பற்றி, கிராமப்புறங்களில் உள்ள சோதிடர் களுக்கும் தெரியாத நிலை இருந்து வருகிறது. அக்கலையில் ஆர்வமும் நம்பிக்கையும் உடையவர்களில் கிராமமக்களே பெரும் பான்மையினர். அவர்கள் அந்நூல்களைப்பற்றி அறிய நேர்ந்தால் பல்லாயிரம் படிகள் விற்பனை ஆகும். ஆகும். மருத்துவ நூல்களின் வரலாறும் இது போன்றதே.

அரசினர் சுவடிநூலகப் கப் பதிப்புகள் மறுபதிப்பு உருவாகும் வாய்ப்பினைப் பெறவில்லை. எனவே பிற்காலப் பயன்பாட்டிலும் அவை இடம் இடம் பெறாமற்போகின்றன. சான்றாக தென்னிந்திய கோயில் சாசனங்கள் என்னும் நூல் மதுரைப் பல்கலைக்கழகப் பாடத்தில் இடம் பெற்றது. மறுபதிப்புகளின்றி, நூல்கிடைக்கா மையால் அவ்வாய்ப்பினை இழந்தது.

மாற்றுச்செயற்பாடுகள்

இவ்வாறான நடைமுறைகளுக்கு கூறப்பெற வேண்டுவதில்லை. கூறாமலே நடைமுறைகள் மாற வேண்டியவை எனலாம்.

FF..

தொடர் ஆய்வுகள்

சுவடி ஆய்வு மேற்கொள்ளும் நிலையில் சுவடிகளை இருவகைப் படுத்தலாம். அவை முன்பே குறிப்பிட்டதுபோல 1.ஓலைச் சுவடிகள். 2. தாள் சுவடிகள் என்பனவாகும். தொடர்ந்து ஆய்வு செய்யலாம் என்பதாகக் காட்டப்பெறும் தலைப்புகள் இவ்வி ந வகைச் சுவடிகளிலும் மேற்கொள்ள வேண்டியவை என்பதை

நினைவிற்கொள்ள வேண்டும்.

1. அச்சாகாத சுவடிகள்

அச்சாகாத தமிழ்ச் சுவடிகள்

(பொதுநிலை ஆய்வுகள்) ஆயிரக்கணக்கில் உள்ளன என்

கின்றனர். தமிழ்ச் சுவடிகளில் பதிப்பிப்பதற்கு இனி என்ன இருக் கிறது என்ற கருத்தும் சான்றோரிடையே நிலவிவருகிறது. இக் கருத்துக்களின் வன்மை மென்மைகளைக் காண்பதே ஒரு தனி ஆய்வாக அமைய இடமுண்டு.

முறையான ஆய்வின்வழி அச்சிடப்பெறாத சுவடிகளை அறுதி யிடுவது சுவடிப் பதிப்புகளை மேற்கொள்ளத் துணைபுரிவதாகும். இந்த ஆய்வில் அச்சாகாத சுவடிகள் மிகுதிபாகக் கிடைக்கிறது என்ற நிலை ஏற்பட்டால் ஆய்வியல் நெறிகளின்படி ஒரு வரை யறையை உருவாக்கிக் கொள்ளலாம். அந்த வரையறையைப் பெருவாரியாக இருவகைப்படுத்தலாம்,

அதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/295&oldid=1571379" இலிருந்து மீள்விக்கப்பட்டது