உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

சுவடி இயல் 1. ஒரு குறிப்பிட்ட நூலகத்திலுள்ள அச்சாகாத சுவடிகள். 2. ஒரு குறிப்பிட்ட பொருள்பற்றிய அச்சாகாத சுவடிகள். என்ற அடிப்படையில் வரையறுத்துக் கொள்ளலாம்.

இந்த வகைப் பாட்டு முறையிலும் மிகுதிகாணப் பெறுவதாக இருந்தால். ஒரு குறிப்பிட்ட நூலகத்திலுள்ள, ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிய அச்சாகாத சுவடிகள் எனவும், அந்த ஒரு பொருளிலும் ஒரு உட்பிரிவு பற்றிய சுவடிகள் எனவும் ஆய்வுப் பொருளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள இயலும். சான்றாக,

ஒரு நூலக இலக்கியச் சுவடிகளை ஆய்வு செய்வதானால், 1. அகப் பொருள் இலக்கியச் சுவடிகள்

2. புறப் பொருள் இலக்கியச் சுவடிகள் புராண இலக்கியச் சுவடிகள்

3.

4.

தலபுராணச் சுவடிகள்

5. பக்தி

பக்தி இலக்கியச் சுவடிகள் (ஒரு சமயம் பற்றியவை. பல சமயம் குறித்தவை)

6. சிற்றிலக்கியச் சுவடிகள் (ஒருவகைச் சிற்றிலக்கியம்) என்ற அடிப்படையில்

வரையறுத்துக் கொள்ளுவது தெளிவான ஆய்வுக்குத் துணைபுரியும், இவ்வகை ஆய்வுகள் பொதுநிலை ஆய்வுகளாகும்.

2. சிறப்புநிலை ஆய்வுகள் : பொதுநிலை ஆய்வில் வெளி யாகும் சுவடிகள் பலவும் சிறப்புநிலை ஆய்வுக்குரியவை ஆகலாம் இவ்வகையுள் சில.

1. மெக்கன்சி என்பவர் திரட்டிய சுவடிகளில் உள்ள கைபீதுகள், வரலாறுகள், வமிசாவளிகள்போல்வன தனித்தனித் தலைப்புக்குரியன.

2. முழுமை இலக்கியங்களிலிருந்து உருவான ஒருமை இலக் கியங்கள் பல தொகுப்புப் பதிப்பாய்வுத் தலைப்புகளுக்கு உரியவை யாகும். சான்றாக, வான்மீகிராமாயணம், கம்பராமாயணம் ஆகிய முழுமை இலக்கியங்களிலிருந்து உருவான குகநட்பு, சடாயு மோட்சம், மூலபலப்போர், விசுவாமித்திரன், வீர அனுமன் போன்ற ஒருமை இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல் அமைப்பை உடையவை; மூலநூல்களுடன் மூலநூல்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து நுழைவு களைக் காரண காரியங்களுடன் எடுத்துக் காட்டக் கூடியவை யாகும். இதே அமைப்பில் பாரதம், சிலப்பதிகாரம் போன்ற முழுமை இலக்கியங்களின் வழிதோன்றிய ஒருமை இலக்கியங்கள்

டமளிப்பனவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/296&oldid=1571380" இலிருந்து மீள்விக்கப்பட்டது