உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சு

L

281

3. மருத்துவச் சுவடிகள் பல அச்சாகிவிட்டன என்பர். ஆனால் அவை கூறும் மருந்துப் பொருள்கள் எவை? மருந்தைச் செய்வது எப்படி? துணை மருந்துகள் எவை? மருந்தை எப்படிக் கொடுப்பது? பத்தியம் என்ன? என்பனவற்றை எளிமையாக அறிந்து பயன்படுத்த முடியாத நிலையிலேயே அந்த நூல்கள் வெளியாகியுள்ளன, இம்முறைகளோடு கூடிய தெளிவுப் பதிப்பு களைச் சுவடிப்பதிப்பு ஆய்வை மேற்கொள்ளுவதன் வழி உருவாக்க முடியும். இவை பயனுள்ள ஆய்வுகளாகும். பல சுவடிகளில் காணும் ஒரு நோய் பற்றிய செய்திகளின் தொகுப்பாய்வுகளும் பயன்தருவனவாகும். அந்தந்தத் துறையின் வல்லுநர்கள் இத்தகு ஆய்வுகளில் ஈடுபடுவது பெரிதும் பயன் தருவதாகும்.

4. சோதிடச் சுவடிகள் பல ஆய்வுக்குரியவை. இக்கலை அறிந்தவர் இவ்வகை ஆய்வில் ஈடுபடலாம்.

இத்தகு சிறப்பு நிலை ஆய்வுகளுக்குரியவையாகப் பலவகைச் சிற்றிலக்கியங்கள் பழமைவாய்ந்த பலவகை நாடகங்கள் போன்றவை மிகுந்துள்ளன. தாள் சுவடிசளில் கூள்ள பல நூல் களும் இவ்வகையைச் சார்ந்தவையாகும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/297&oldid=1571381" இலிருந்து மீள்விக்கப்பட்டது