உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

டாக்டர். அன்னி மிருதுல குமாரி தாமசு

இணைப் பேராசிரியர், இயக்குநர், (பொறுப்பு.) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1979-இல் சுவடியியல் துறையை அமைத்து, முதுகலை சுவடியியல் பட்டய வகுப்பையும் தொடங்கியது. இதற்கு, அந்நாளைய இயக்குநர் டாக்டர் ச.வே. சுப்பிரமணியன் அவர்கள் காரணமாக அமைந்தார். ஆண்டு தோறும் பட்டயக் கல்வி பெற்ற மாணவர் உருப்பெற்றதுடன், சுவடிப் பதிப்பு நூல்களும் இதனால் வெளிவரலாயின. மேலும், மாணவர்க்கு உதவும் நிலையில் பயிற்சி. கையேடு எனும் சிறுநூலும் ஆக்கம்பெற்றது. எனினும் சுவடியியல் பயிலும் மாணவர்க்கு ஒரு சிறந்த பாடநூலின் தேவை தொடர்ந்து இருந்தது.

அந்நிலையில், இச்சுவடியியல் பட்டய வகுப்புகள் நிகழ்த்தும் பொறுப்பை ஏற்றுப் பணிபுரிந்த திரு, பூ. சுப்பிரமணியம் அவர்கள், சுவடியியல் - ஓர் ஆய்வு' எனும் தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழக முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்து. 1986-இல் பிஎச்.டி. பெற்றார். அவ்வாய்வேட்டின் செறிந்த வடிவம் தற்போது 'சுவடியியல்' எனும் பெயரில் இந்நூலாக வெளிவருகிறது.

நிறுவனத்தின், சுவடியியல் மாணவரின், சுவடித் துறை ஆர்வலரின் பலநாள் தேவையைச் சிறந்த முறையில் நிறைவு செய்யும் இந்நூலை ஆக்கிய ஆசிரியர் டாக்டர் பூ. சுப்பிரமணியம் அவர்கள் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்.

நிறுவனச் சுவடித்துறையின் நினைவுச் சின்னமான இந்நூலை நன்றே அச்சியற்றிய கவின்கலை அச்சகத்தினர்க்கு எம் நன்றி.

QFÂNT 50 607-113

31-12-91

அன்னி தாமசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/4&oldid=1571073" இலிருந்து மீள்விக்கப்பட்டது