உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றி

ஆய்வுப் பட்டத்திற்காகப் பதிவு செய்து கொள்ள இயலா சூழ்நிலையில், பதிவு செய்ய வழிவகுத்துத் தந்தவர் டாக்டர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள். ஆய்வுப் பார்வையில் நெறிப் படுத்தி,ஆய்வேட்டினை முடிக்கத் துணைபுரிந்தவர் மேற்பார்வை யாளர் டாக்டர் அன்னிதாமசு அவர்கள். ஆய்வின் தொடக்கத்தில் நெறியாளராக இருந்து வழிகாட்டி அனைத்துப் பணிகளிலும் ஊக்கமூட்டி உதவி செய்து வந்தவர் டாக்டர் ந.கடிகாசலம் அவர்கள். கட்டுரைகளைத் திருத்தித் தந்தும், மீண்டும் மீண்டும் எழுதச் செய்து தூய்மைப்படுத்தியும், பல நூல்களைக் கொடுத்து உதவியும் முழுமையான உழைப்பை நல்கியவர் டாக்டர் இ.சுந்தர மூர்த்தி அவர்கள். உடனிருந்து கருத்துரை வழங்கி, பல்லாற் றானும் துணை புரிந்தவர் டாக்டர் ம. இராசேந்திரன் அவர்கள். தொடக்கக் கட்டுரைகள் தொடங்கி ஆய்வேடு முடியும் வரை பல முறை தட்டச்சு செய்து கொடுத்து உதவியவர்கள் சு. இளங்கோ, சு. இளவரசு ஆகியோர்.

அனைவரும் என்னுடைய வணக்கத்திற்கும் நன்றிக்கும் உரிய வர்களாகிறார்கள்.

நூலாக வெளியிட

இந்த ஆய்வேட்டினை வேண்டுமென்று முயற்சி செய்ததுண்டு; இயலவில்லை, பல ஆண்டுகளாகப் பல்கலைக் கழக இசைவு கிடைக்கவில்லை என்பது முதற்காரணம். அச்சிட்டபின் நூல்களைப் பல ஆண்டுகளுக்கு வைத்துப் பாதுகாக்க வேண்டுமே என்ற எண்ணம் அடுத்த காரணம். மேற்கொண்டு முயற்சி செய்யாமைக்கு இதுவே காரணம் எனலாம்.

இந்த ஆய்வேடு சுவடி இயல் பபிற்சி வகுப்புகளுக்குரிய முழுமை யான பாடத்திட்டத்தை உள்ளடக்கியது; பிற துணை நூல்களுக் கான பட்டியலும் அடங்கியிருக்கிறது; சுவடியைப் பற்றி அறிய விரும்புவோருக்கும், சுவடி ஆய்வாளருக்கும் பதிப்பாசிரியர் களுக்கும் துணை புரியக் கூடியது; பாட நூலாகவே கொள்ளும் தகுதி வாய்ந்தது என்பன போன்ற கருத்துகள் என்னுடைய நெறி யாளரும், நிறுவன இயக்குநர் பொறுப்பிலே இருந்து வருபவருமான டாக்டர் அன்னிதாமசு அவர்களின் உள்ளத்தில் தேங்கிக் கிடந் ள் ளன. அந்த எண்ணங்களின் வெளிப்பாடே இந்த நூலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/5&oldid=1571074" இலிருந்து மீள்விக்கப்பட்டது