உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

FF.

சுவடிகளின் வகை

சுவடி இயல்

இவ்வகைப்பாடு சென்னை அரசினர் சுவடி நூலகம், உ.வே.சாமிநாதையர் நூலகம், தஞ்சை, சரசுவதிமகால் நூலகம் ஆகியவற்றில் வெளியிட்டுள்ள விளக்க அட்டவணைகளின் துணை கொண்டு அமைகிறது. தமிழில் கிடைத்துள்ள சுவடிகளைப் பெரு வாரியாக,பொருள், வாரியாக, பொருள், நடை, சுவடி என்ற மூன்று அடிப்படையில்

வகைப்படுத்தலாம்.

பொருள்: பொருள் அடிப்படையில் சுவடிகளை, அகராதி, அரிச்சுவடி, இரசவாதம், இலக்கணம், இலக்கியம், கணிதம், சமயம், ஜாலம், சோதிடம், தோத்திரம், நாடகம், புவிஇயல்' மருத்துவம், மாந்திரீகம், வரலாறு, வானவியல் என்ற பதினாறு வகைப் பெரும் பிரிவுகளாகப் பிரிக்க முடிகிறது.

நடை : சுவடிகளில் காணும் மொழிநடை யடிப்படையில் பாட்டு நடைச்சுவடிகள், உரைநடைச்சுவடிகள், இரண்டும் கலந்த நடைச்சுவடிகள், மணிப்பிரவாள நடைச்சுவடிக்ள், பிறமொழியில் எழுதப்பெற்ற தமிழ்ச் சுவடிகள் என்ற

வகுக்கலாம்.

சுவடிகளின் தன்மையைக் கொண்டு

ஐந்து பிரிவுகளாக

சுவடி :

மூலநூல் சுவடிகள்

மூலம் மட்டும் உள்ளவை

முற்றுப் பெற்றவை

பிழையற்றவை

படிக்க இயலும் நிலையில்

உள்ளவை

படியெடுக்கப்பட்டவை

உரையுடன் கூடியவை

குறையானவை

பிழைமலிந்தவை

படிக்க இயலாதவை

என்ற நிலைகளில் ஐந்து இரட்டை வகையாகப் பிரித்துக் காண முடிகிறது. இவ்வைந்து வகையிலும் கூந்தற்பனை, நுங்குப்பனை ஆகிய ஓலைச் சுவடிகளும் தாளில் எழுதப் பெற்ற சுவடிகளுமாக இருவகை வடிவங்கள் உள்ளன. இவற்றுள் பொருளால் வகைப் படுத்தப் பெற்ற சுவடிகளுக்கு விளக்கம் தரலாம்.

அகராதி:

அகராதிச் சுருக்கம், ஆங்கிலம் - தமிழ் அசராதி, சோதிடக் கடலகராதி, தமிழ்ச்சொல்லகராதி, திவ்வியப்பிரபந்த அகராதி, நிகண்டுகள் (பலவகை), பிரஞ்சு-தமிழ் அகராதி, மருத்துவ அகராதி ஆகிய பெயர்களில் பல அகராதிகள் காணப் பெறுகின்றன.

அரிச்சுவடி : அகரவரிசையில் உயிர், மெய், உயிர்மெய் ஆகிய எழுத்துகள் அடங்கியவை; ஈரெழுத்துச் சொற்கள் முதலாக ஆறெழுத்துச் சொற்கள் ஈறாக உள்ள பாலபாடம் ஆகியவை இவ்வகையின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/70&oldid=1571142" இலிருந்து மீள்விக்கப்பட்டது