உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பும் வகையும்

53

கூடம் ஆண்டு 1812. திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் பிழைதீர்த்துச் சென்னைப் பட்டணத்துக்கு அனுப்பிவிச்சு அவ்விடத்திலிருந்த திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் அவர்கள் மறுபடிக் கண்ணோட்டத்துடன் ஆராயப்பட்டு அச்சிற் பதித்த காயிதப் பொத்தகத்தை ஆழ்வார் திருநகரியில் தேவர்பிரான் கவிராயர், ஆதிநாத பிள்ளை தலத்தேடுகள் வைத்துச் சோதித்து வேறேடு எழுதியிருப்பது. மறுபடி திருநெல்வேலியில் அம்பலவாண கவிராயரிடத்தில் தீர்மான மானது. ஆழ்வார் திருநகரியில் சோதித்தது’’71

.

இரண்டரை அங்குல அகலமுடைய ஒரு சுவடியில் பக்கத்திற்கு இருபத்து நான்கு வரிகள் வீதம் எழுதப்பட்டுள்ளன. பதினெட்டு அங்குல நீளமுள்ள அவ்வேட்டில் ஒரு வரிக்கு நூற்றுஇருபது எழுத்துகள் காணப்படுகின்றன. அச்சுநூலின் சுமார் ஐந்து பக்கச் செய்திகள் இச்சுவடியின் ஒரு பக்கத்தில் காணப்படுகின்றன. (டி. 2252) எழுத்துகள் தனித்தனியாகவும் தெளிவாகவும் உள்ளன. ஒரு பக்கத்திற்கு நான்கு வரி வீதம் எழுதப்பட்டுள்ள சுவடிகளும் உண்டு. எவ்வாறாயினும் பெரும்பாலும் ஒரு சுவடியின் அனைத்து ஏடுகளும் (ஒருவரால் எழுதப் பெற்ற சுவடி) ஒரே அளவுடைய வரி களால் அமைகின்றன.

“ஒரு பக்கத்திற்கு எட்டுவரிகள் வீதம் ஒரே முறையாக நூற்று முப்பது பக்கங்களும் எழுதப்பட்டுள்ளன'2 இதன்கண் 93 இதழ்கள் உள்ளன.

இதழின் பக்கம் ஒவ்வொன்றும் நான்கு செய்யுட்களுக்குரிய எட்டு வரிகள் கொண்டன 78 78

என்னும் கூற்றுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

ஒரு சுவடியில் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரு ஏட்டின் முதல் பக்க இறுதியில் ஒரு நூல் முடிவு பெற்றால் அதே ஏட்டின் பின்புறம் வேறு நூல் தொடங்கப்பட்டுள்ள நிலை பல சுவடிகளில் காணப்படுகிறது. அதனால் நூல்வாரியாக அச்சுவடியைப் பிரித்து வைத்து வகைப்படுத்த முடிவதில்லை. ஆயினும் நூல்களின் பெயரால் சுவடிகளை வகைப்படுத்தி, அவற்றை எடுத்துக் கையாளு வதற்குரிய முறையில் எளிமைப்படுத்த முடிகிறது.

71. கல்கத்தா சுவடி, 3074.

72. தன்வந்திரி குழந்தை வாகடம், பக்.34.

73. அரும்பொருள் விளக்க நிகண்டு, முன்னுரை, பக்.28.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/69&oldid=1571141" இலிருந்து மீள்விக்கப்பட்டது