உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இறுதியமைப்பு சுவடித் தலைமுறை

சுவடி இயல்

"இந்தப் பன்னிரண்டு காந்தங்களும் விஷ்ணுபிரியர் தெலுங்கிலே புஷ்பகிரி திம்மபய்யன் எழுதினதைப் பார்த்து எவ்வார் வாத்தியார் சின்னய்யன் தமிழ் வசனத்தினாலே எழுதினார். இந்தக் கதை அட்சர சுத்தமாக விளங்கக் கடவது.

இந்தப் பாகவதக் கதையை ஈன்னே வேங்கடபதி முதலியார் எழுதி வைத்தார். வைத்தார். அதன் பிறகு சுப்பிரமணிய முதலியார் எழுதி வைத்தார். அப்பால் நாகப்பட்டணம்

செகப்ப மேஸ்திரியார் குமாரன் ராமலிங்க மேஸ்திரியாருக்கு ராமலிங்க வாத்தியார் எழுதிக் கொடுத்தார்.

துன்முகி வருஷம் மார்கழி மாதம் 17ஆம் தேதி புதன் கிழமை சுவாதி நட்சத்திரத்தில் எழுதினது.

கொழும்பிலிருக்கும் செகப்பன் சுவடி பாகவதம்.

69

70

“1850ஆம் வருஷம் ஜனவரி மாதம் 18ஆம் தேதி அகத்தியநாதர் அருளிச் செய்த தண்டகம் நூறும் அயிதர் சாயபுக்கு ஆனைக் குளத்து தாவீது வாத்தியாரால் எழுதிக் கொடுக்கப்பட்டது. சுவடிகளின் முடிவில் காணப்படும் இக்கூற்றுகள், சுவடியின் காலம், சுவடிக்கு உரியவர், சுவடி எழுதியவர், சுவடியின் பரம்பரை ஆகிய வரலாறுகளை உணர்த்துவனவாகும். தமிழில் நூல்கள் அச்சிடத் தொடங்கிய காலத்திற்குப் பிறகும் (1850 ஜனவரி) எழுதிப் படித்துள்ளனர் என்பதும் புலனாகிறது.

ஓலையில்

இறுதி அமைப்பு - அச்சான நூல்களின் விவரம் : சுவடியி லிருந்து அச்சிடப் பெற்ற நூல்களையும் தமிழ்ச் சான்றோர்கள் ஆராய்ந்துள்ளார்கள். அவற்றைச் சிறந்த சுவடிகளோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கின்றார்கள். திருத்தங்களைச் செய்து வேறு சுவடிகளில் எழுதி வைத்திருக்கின்றனர். இவ்வரலாற்றுச் செய்திகளும் சுவடிகளின் இறுதிக் குறிப்பில் காணப் பெறுகின்றன. சான்று :

'இது பொத்தகம் கலியுகாப்தம் 4900க்கு ஆங்கிரச வருஷம் தொண்டை மண்டலம் சென்னைப் பட்டணத்தில் தஞ்சை நகரம் மலையப்பபிள்ளை குமாரன் ஞானப்பிர காசனால் மாசம தினச்சரிதையின் அச்சுக்

அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.

69. பாகவத வசனம், டி. 432.

70. அகத்தியர் தண்டகம் நூறு, டி. 1883

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/68&oldid=1571140" இலிருந்து மீள்விக்கப்பட்டது