உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பும் வகையும்

51

"சாலிவாகன சகாப்தம் 1676க்கு மேற் செல்லா நின்ற ஸ்ரீமுக வருஷம் சித்திரை மாதம் 24ஆம் தேதி கிருஷ்ணபட்சம்... நவாசிப்பேட்டை வேலாயுத பண்டாரம் திருச்சிற்றம்பலக் கோவையார் எழுதி முடித்தான்”66

காலம்,

திருக்கோவையார் தோன்றிய செய்தியும், சுவடிகளின் எழுதியவர் ஆகிய வருகின்றன.

செய்திகளும் இக்குறிப்புரைகளால் அறிய

66

"ஆனந்த வருஷம் பங்குனி மாதம் 15ஆம் தேதி புதன்கிழமை உரோகணி நட்சத்திரம், புதுவை மாநகரத்தில் இருக்கும் குழந்தைவேல் உபாத்தியாயர் அரும்பொருள் விளக்க நிகண்டு எழுதி நிறைவேறியது. புதுவை வித்வான் பொய்கைப்பாக்கம் சின்னய்ய உபாத்தியாயர் முதல்தாரத்து இரண்டாவது குமாரன் குழந்தைவேலு உபாத்தியாயர் எழுதினது

இம்முடிவுரை சுவடியின் காலத்தைக் கூறுவதோடு சுவடி எழுதியவரின் வரலாற்றையும் ஒரு சிறிது உணர வைக்கிறது. இறுதியமைப்பு - எழுதியவர் செயற்பாடுகள்

பிள்ளைக்கண் பிள்ளையவர்கள் குமாரர் ஆதிநாத பிள்ளை அகராதி. மேற்படியார் மகன் இளையவன் பெரிய திருவடிப் பிள்ளை எழுதினது. அகராதி வயித்தியலிங்கன் பிள்ளை ஏடு பார்த்து எழுதினது.

1103 வருஷம் சர்வசித்து வருஷம் தை மாதம் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை... தொடங்கி எழுதினது. மேற்படி வருஷம் மாசி மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை... மேற்படி அகராதி எழுதிநிறைவேறியது. இந்த அகராதியை நான் 1104 வருஷம் மேற்படி மாதம் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை... முதல், பிழை பார்த்து உயிர் எழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஒற்றெழுத்து இதுகளில் மொழிக்கு முதல் எழுத்துகளும் நூதனம் எழுதி 1104 வருஷம் பங்குனி மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை எழுதி முடிந்தது

இதில் சுவடி எழுதிய வரலாற்றோடு நூதனமாக அகரவரிசைப் படுத்திய முறை முதலான எழுதியவர் செயற்பாடுகளும் சுட்டப் பெறுகின்றன.

66. திருச்சிற்றம்பலக் கோவையர், சுவடி, டி. 1173.

67. அரும்பொருள் விளக்க நிகண்டு, சுவடி, டி. 2207. 68. அகராதி, கல்கத்தா சுவடி, 2993.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/67&oldid=1571139" இலிருந்து மீள்விக்கப்பட்டது