50
என்று
"தத்தைகுணமாலை என்னுங்காவியம், என்னுங்காவியம் கந்தியார் கூற்று'
988
கூறும் நச்சினார்க்கினியர் கூற்றால்
சுவடி இயல் 'பகைமாற்று'
இப்பாடல்களைக்
கந்தியார் என்பவர் பாடி இடையிலே சேர்த்துள்ளார் என்பது
தெரிய வருகிறது.
இறுதி அமைப்பு - அவையடக்கம்
"ஓரா தெழுதினே னாயினு மொண்பொருளை யாராய்ந்து கொள்க வறிவுடையார்-சீராய்ந்து குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல் கற்றறிந்த மாந்தர் கடன்'6 *
அவையடக்கமாகப் பாடப் பெறுகின்ற இது போன்ற பாடல்களும் சில சுவடிகளின் ஈற்றில் காணப்பெறுகின்றன.
இறுதி அமைப்பு
ரைநடை: சுவ சுவடியில் உள்ள
நூலின்
பெயர் அச்சுவடி எழுதத் தொடங்கிய அல்லது எழுதி முடித்த நாள், சுவடி எழுதியவரின் பெயர், எழுதுவித்தவரின் பெயர், பார்த்து எழுதப் பயன்பட்ட சுவடிக்குரியவர் பெயர், அச்சுவடிக்கு மூலச் சுவடி எது என்ற செய்தி ஆகிய பலவகை விவரங்கள் பெரும் பாலான சுவடிகளின் இறுதி ஏட்டில் எழுதப் பெற்றிருக்கும். வை பிற்காலச் சுவடிகளில்-மூல நூலாயின் - நூலாசிரியரால் எழுதப் பெற்றிருக்கும். இவற்றுள்ளும் ஏற்புடைய சில செய்தி களே காணப் பெறும். பிற சுவடிகளாயின் சுவடி சுவடி எழுதியவர் கூற்றாகவே இருக்கும். இதனால் நூலின் காலம் முதலியன அறிய இயலாது ஆயினும் அச்சுவடியின் காலம் முதலிய செய்திகளைத் தெளிவாக அறிய முடிகிறது.
இறுதி அமைப்பு - எழுதிய வரலாறு
"தில்லைவனப் பெரும்பற்றப் புலியூர்த் திருச்சிற்றம்பல வாண ராகிய அழகிய திருச்சிற்றம்பலமுடையார் மாணிக்கவாசகர் சொற்படிக்குத் தமது அருமைத் திருக்கரத்தால் எழுதியருளிய திருச்சிற்றம்பலக் கோவை முற்றும். பிரசோற்பத்தி வருஷம் தை மாதம் 29ஆம் தேதி நவமியும் அனுஷமுங் கூடின சுபதினத் தில் எழுதி நிறைந்தது'க
63. சீவக சிந்தாமணி, சுவடி இறுதி.
64. கலித்தொகை, சுவடி,டி.210.
65. திருச்சிற்றம்பலக் கோவையார், சுவடி, டி. 1174