உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

சுவடி இயல்

சோதிடம் : அட்டகவர்க்கம், அரிட்டநவநீதம், ஆருட சாத்திரம், இராசிபலன், இருதுசாத்திரம், இலக்கினபலன், கரிநாள் விளக்கம், பஞ்சபட்சி சூத்திரம் முதலான சிறுசிறு நூல்கள் முதல் சப்தரிஷி நாடி என்னும் நாடி சோதிடம் ஈறாகப் பலவகைச்

சோதிட நூல்கள் இவ்வகையில் அடங்குவனவாகும்.

தோத்திரம் : சமயங்களுக்கேற்ற தனித்தனிக் கடவுளர் பெயரால் இயற்றப்பெற்ற தனித்தனிப் பாடற்றொகுதிகள் இவ் வகையைச் சாரும்.

நாடகம்: நாடகம், விலாசம், நொண்டி நாடகம் ஆகிய வகை களில் கதை தழுவிய நாடகச் சுவடிகள் பல நாடகச் சுவடிகள் பல இவ்வகையில் அமை கின்றன.

மருத்துவம் : அகத்தியர் குருநூல். அம்பிகானந்தர்முப்பூ,

இராமதேவர் தண்டகம், கருவூரார் வைத்தியம், கொங்கணர் கற்பம், நந்திதேவர் பெருநூல் என ஆசிரியர் பெயரால் அமைவன ஒருவகை. கற்பம், கியாழம், குளிகை, சரக்கு, சூரணம், தைலம், லேகியம் என்பன மருந்து முறைகளால் வகைப்படுத்தப்படுவன. குன்மரோக சிகிச்சை, நயனரோக சிகிச்சை, வாதரோக சிகிச்சை என்பவை நோயால் பெயர் பெறும் வகையின. குழந்தை வாகடம், பால சிகிச்சை, பிள்ளைப்பிணி மருத்துவம், மகளிர் மருத்துவம், மாட்டுவாகடம், மிருக வைத்தியம் என்பன நோயாளியின் பெயர் பெற்றவை.

அனுபவவைத்தியம், பதார்த்தகுணசிந்தாமணி, வைத்திய சிந்தாமணி போன்றவை பொதுவகையால் அமைந்த மருத்துவச் சுவடிவகையாகும்.

மாந்திரீகம்: ஒட்டிய நூல், கருடபஞ்சாட்சரம், தண்ணீரோது மந்திரம், போன்ற மந்திர நூற் சுவடிகளும் ஒருவகையாகின்றன. இவற்றுள் ஒட்டிய நூல் வர்மசாத்திரம் பற்றிய செய்தியாகவும் அமைகிறது.

வரலாறு: கல்வெட்டு, கைபீது, சரித்திரம், சாசனம், சிலாசாசனம், வமிசாவளி, வரலரறு என்னும் இறுதிச் சொற்களில் அமையும் வரலாற்றுச் சுவடிகள் பல இவ்வகையில் உள்ளன. இவ்வகைகளைத் தவிர, கப்பல் சாத்திரம்,கூவநூல், சாமுத்திரிகம், சிற்பசாத்திரம், தர்மசாத்திரம், நாவாய் சாத்திரம், பாண சாத்திரம், மயநூல், மனையடி சாத்திரம், போன்ற பலவகைச் சுவடிகளும் காணப் பெறுகின்றன.

பொருள்வகைச் சுவடிகளாகிய இவை அனைத்தும் மேலே குறிப்பிட்ட ஐந்து வகை நடைகளிலும், ஐந்து வகைச் சுவடி வடிவிலும் கலந்தே அமைந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/72&oldid=1571144" இலிருந்து மீள்விக்கப்பட்டது