உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

3. அழிவும் திரட்டுதலும்

சங்ககாலந்தொட்டுத்

திரட்டப்பெற்றும் இயற்றப்பெற்றும் பாதுகாக்கப்பெற்றும் வந்த சுவடிகள் அனைத்தும் இன்று நம்மிடையே இல்லை. கிடைக்கும் ஒருசில சுவடிகளும் முழுமை யாகவே அழிந்தன. பல பூச்சிக்கு இரையாகிப் பலபகுதிகள் விளங்காத நிலை அடைந்தன. இவ்வாறான சுவடிகளின் இன்றைய நிலைக்கு இயற்கையும் செயற்கையுமாகிய இருவகைச் செயல்களும் காரணமாகின்றன.

அ: அழிவு

இயற்கைச் சூழலால் அழிவு ? கல்லின்மீது எழுதப்பெற்றவை தட்பவெப்ப நிலைகளால் கற்கள் பிளத்தல், விரிதல், பொடியாதல் ஆகியவற்றால் இயற்கையாகவே அழிகின்றன. கற்களை உடைத் தெடுத்தல், சுண்ணாம்பு, பிறவண்ணங்கள் பூசுதல் ஆகியவற்றால் செயற்கையாகவும் அழிகின்றன.

ஓலைச்சுவடிகளோ

குறுகிய வாழ்நாள் உடையவை. றையான், இராமபாணம், ஓதம், புகை, எரி ஆகியவற்றால் இயற்கையாகவும் விரைவாகவும் பாதிக்கக்கூடியவை. பெருமழை, காற்று, வெய்யில் ஆகிய இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் அழிவு களில் சிக்கக்கூடியவை. சான்றாக, "தமிழுக்குக் காலாந்தரத்தில் இரண்டு பெரும் பூதங்களால் இரண்டு பெரிய இடையூறுகள் நிகழ்ந்தன. குமரியாறும் அதன் தெற்கின் கணுள்ள நாடுகளுஞ் சமுத்திரத்தின் வாய்ப்பட்டமிழ்ந்திய போது...கபாடபுரம் அதன் கண் இருந்த எண்ணாயிரத்தொருநூற்று நாற்பத்தொன்பது கிரந்தங்களோடு வருணபகவானுக்கு ஆசமனமாயிற்று...மறுபடியுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/73&oldid=1571145" இலிருந்து மீள்விக்கப்பட்டது