உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t

58

சுவடி இயல் தமிழ் தலையெடுத்தபோது நாடு முகமதியர் கைப்பட, அவர்கள் கொறானுக்கு மாறாகவும் வீறாவதோ கிரந்தங்கள் மண்மேல் என்று மத வைராக்கியங்கொண்டு அந்தோ! நமது நூற்சாலைகள் அனைத்தும் நீறாக அக்கினி பகவானுக்குத் தத்தஞ் செய்தனர்” என்னும் சான்றோர் கூற்று இயற்கைச் சீற்றத்திற்குச் சுவடிகள் பலியாயினதையும், பலியாக்கப்பட்டதையும் சுட்டுகின்றது.

1

செயற்கையாக அழிவு : தமிழ்ச் சுவடிகளைப் பொறுத்தவரை யில் பலவகையான செயற்கைத் தன்மைகளாலும் அழிவு ஏற்பட் டுள்ளது. அதாவது, மன்னரிடை நிகழ்ந்தபோர், அரசியல் மாற்றம், மக்களின் குடிபெயர்ச்சி, வெளிநாட்டினருக்கு விற்றல், எரியிலிடல், நீரில் எறிதல், கவனமின்மை,

கையாளும் முறைகேடு சுவடிகள் அழிந்துள்ளன.

ஆகிய ய செயற்கைத்

பாதுகாப்பின்மை, தன்மைகளாலும்

அந்நியர் கவர்தல் : கால வெள்ளத்திலும் கடல்வெள்ளத் திலும் அழிந்தவை பல; இராமபாணப்பூச்சிக்கும் கறையானுக்கும் இரையானவை பல; மாற்றாரின் சூழ்ச்சிக்கு இலக்காகி நெருப் பிலும் நீரிலும் அழிந்தவைபல...இந்த அழிவுகளுக்கெல்லாம் பலி யாகாமல் எஞ்சிநின்ற ஏடுகளிலும் ஒரு பகுதியை அந்நியர்கள் கொண்டு போய்விட்டனர் ... அந்நியர்கள் வாரிச்சென்ற எண்ணற்ற செல்வங்களுள் நம்முடைய ஏட்டுச் சுவடிகளும் அடங்கியே

இருந்தன. லிஸ்பன், கோப்பன்ஹாகன், பாரிசு, லண்டன், ரோம் போன்ற பெருநகரங்களின் நூல் நிலையங்களிலுள்ள தமிழ்ச் சுவடிகளே அதற்குச் சான்று பகரும்,” என்று கூறும் அ. தமோதரன் அவர்களின் அனுபவக்கூற்று இயற்கையாலும் செயற்கையாலும் தமிழ்ச்சுவடிகளுக்கேற்பட்ட அழிவினுக்குச் சான்றாகிறது. பேணாக்குறை : "தொல்காப்பியனார்க்கு முன்னும் பின்னும்

வாழ்ந்த செந்நாப் புலமைச்

செல்வர்களால் யாக்கப்

பெற்றுக் கடல்கோள்களாலும் பேணாப் பெருங்குறை யாலும் கிட்டாதொழிந்தன

போக எஞ்சியவற்றைப்

பாட்டெனவும் தொகையெனவுங் கட்டித் தொகுத்தனர்'

என்பர் சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள்.8

"முதனூல் உயர்ந்தது, வழிநூல் தாழ்ந்தது; வழிநூல் தூயது. முதனூல் தெளிவில்லது என்று பிணங்கி வேறுபட்டு

1. தாமோதரம். பக். 45.

2. லண்டன் தமிழ்ச்சங்க ஆண்டுமலர், பக். 47-48.

3. புறநானூறு, பதிப்புரை, பக். 1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/74&oldid=1571146" இலிருந்து மீள்விக்கப்பட்டது