உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிவும் திரட்டுதலும்

59

ஒதுக்கும் நிலை முன்னாளில் மக்களிடையே தோன்றவில்லை. தெளிவில்லாத சிலரிடையே அச்செயல் சில காரணம் பற்றித் தோன்றியதுண்டு. அதன் விளைவாக நூல்கள் பல பேணுவா ஏற்று இறந்தன.

இவ்வாறு கருத்து எத்துணையோ?

மாறுபாட்டினால்

அழிந்த நூல்கள்

மறக்கேடு : "காடக

செப்பேட்டோடு

சோமாஜியார்க்கு ஏகபோகமதுவாக எழிற் குடுத்தனன்...இவ்வூரிரண்டின் செப்பேடு

மறக்கேட்டில் இழந்து போயின... சொல்லிய ஊரிரண்டுந் தம்மில் எல்லை கலந்து கிடக்குமாதலின்...’5

போர் முதலிய

கேடுகளால் செப்பேடுகள் போன்றவையே அழி வுற்றன என்னும் இக்கூற்று ஓலைச்சுவடிகளுக்கு மிகச்சாதாரண மாகவே பொருந்தும்.

குதிரைக்கு வெந்நீர் போட : "பழங்காலத்துத் தமிழ் வேந்தர் மேற்கொண்டிருந்த போர்முறைகளுள் பகைவரூரைத் தீக்கு இரையாக்குதல் ஒன்று. அதனால் நூல்கள் அழிதற்கு இடமுண்டு. வேற்று நாட்டவர் போந்து, இந்நாட்டு மக்கள் இவர்தம் தொன்மையுணர்ந்து செம்மை நிலைபெறாவாறு செய்வது குறித்து நூல்களை அழித்ததுமுண்டு. மதுரை

மாநாட்டுக்குத் தலைவராய்ப் போந்திருந்த வேற்று நாட்டவர் ஒருவர் தேடித் தொகுத்திருந்த பழைய தமிழ் ஓலையேட்டுச் சுவடிகள், இருநூறு நாட்கள் குதிரைக்கு வெந்நீர் காய்ச்சு தற்குப் பயன்பட்டன என்பர்... வெள்ளையராட்சி இந்நாட்டில் நிலைபெறுமுன்...பலதிற வேந்தர் ஆட்சி நிலைநின்று நடந்த தெனக் கல்வெட்டுக்களும் பிறவும் கூறுகின்றனவே! அவ்வாட்சி நிகழ்ச்சிகளைக் குறித்த ஏடுகள் இப்போது சிலவேனும் உண்டா?...இவற்றின் வேறாகக் கடல்கோள்களும்... மறக் காலங்களும் தம்மாலியன்ற அழிவினைச் செய்துள்ளன,

என்னும்

சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் கூறும் காரணம் வேதனைக்குரியதாக உள்ளது.

எப்படியோ அழிந்தவை : எப்படியோ காணாமற்போயின என்ற பட்டியலில் பல சுவடிகள் சேருகின்றன. அவை பெரும் பாலும் ஆசிரியரால் இயற்றப்பட்ட மூலச்சுவடிகளாகும் என்பதும்,

4. கழகப் பொன்விழா மலர், பக். 53-54.

5. தளவாய்ப்புரச் செப்பேடு.

6. மதுரைக் குமரனார், பக். 9-10.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/75&oldid=1571147" இலிருந்து மீள்விக்கப்பட்டது