உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

சுவடி இயல் இவ்வாறு மறைந்த சுவடிகளுக்கு எக்காலத்தும் வேறுசுவடிகள் காண்பது இயலாதென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இச்செய்தியை,

'உத்தமதானபுரத்திலிருந்த லிங்கப்பையர் என்பவர் சுவாமி பற்றிய ஒரு குறவஞ்சி நாடகத்தையும்,

உத்தமதானபுரம் அம்பிகை மீதும் கணபதிமீதும் பல கீர்த்தனங்களையும் இயற்றியிருக்கிறார். அவர் குமாரர்களும் பிறரும் பாடக் கேட்டிருக்கிறேன். இப்பொழுது ஒரு கீர்த்தனமும் கிடைக்க வில்லை."எ

என்னும் உ.வே.சா. அவர்களின் கூற்று தெளிவுபடுத்துகிறது.

தேடியும்

சி.வை.

மேலும், உ. வே. சா ா. அவர்கள் படித்த காலத்தில் திருவாவடுதுறை மடத்துப் புத்தகசாலையில் வளையாபதி' என்னும் சுவடியைப் பார்த்திருக்கிறார். ஆனால் அவர் சுவடிப் பதிப்பில் ஈடுபட்டபோது அச்சுவடி காணப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் அச்சுவடி கிடைக்கவில்லை.8 தாமோதரம் பிள்ளையவர்களுக்குச் சிறுவயதில் அவருடைய தந்தையார் சில நூல்களைக் கற்பித்தார். அவற்றைப் பிள்ளை யவர்கள் பதிப்பிக்க எண்ணியபோது தமிழ் நாடெங்கும் தேடியும் அச்சுவடிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. எப்படியோ காணாமற்போயின என்னும் பட்டியலைச் சார்வன வாகும்.

இச்சுவடிகளெல்லாம்

அறியாமையால் அழிவு - அந்நியருக்கு விற்றல் : தமிழ்ச் சுவடி களைப் புதுவகை அபாயமொன்று இப்பொழுது சூழ்ந்திருக் கிறது...ஆராய்ச்சி செய்யும் மேலைநாட்டு அறிஞர்கள் இந்தியாவுக்கு வந்து களனாய்வுப்பணி செய்வது பெருவழக் காகி வருகிறது....சாதனப்பொருள்களைத் தேடுவதே இவர் களுடைய தலையாய நோக்கமாகும்.... நகல்களுக்குப் பதிலாக அசல் நூல்களையே பெற முயலுகின்றனர்... மேலும் இந்த முயற்சியில் அவர்களுடைய எண்ணம் ஈடேற நம்நாட்டுச் சூழ் நிலையும் ஓரளவு வாய்ப்பளித்து விடுகிறது. அவர்கள் தேவை யறிந்து ஒத்துழைப்பதற்கென்றே ஆங்காங்கு வியாபாரிகளும் தரகர்களும் காத்திருக்கிறார்கள். காத்திருக்கிறார்கள். இவர்களுக்குப் பொருளே

7. என் சரித்திரம், பக். 29-30. 9. தாமோதரம், பக். 45.

8. மேற்படி பக். 858.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/76&oldid=1571149" இலிருந்து மீள்விக்கப்பட்டது