உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிவும் திரட்டுதலும்

61

குறிக்கோளாதலின்... அரிய பதிப்புகளையும் சுவடிகளையும் சேகரித்து அவர்களிடம் இரகசியமாக விற்றுவிடுகின்றனர், என்பர் அ. தாமோதரன் அவர்கள். தமிழரின் அறியாமை மட்டு மின்றி ஏழ்மை காரணமாகவும் சுவடிகள் விற்கப்படுகின்றன என்பதை இக்கூற்று உறுதிப்படுத்துகிறது.

66

'இடைக்காலத்தும் பிற்காலத்தும் வாழ்ந்த தமிழ்ப் பெரு மக்களின் தமிழ்ப் பாசுரங்களும் எத்தனையோ வழங்கியிருத்தல் வேண்டும். அவையெல்லாம்... மறைந்தொழிந்தன. இதன் காரணம் முன்னோர்போல அவற்றைப் பின்னோரும் சேமித்துத் தொகுத்துதவத் தவறியதேயாகும்.”11

“காலப்போக்கில் சிறிது சிறிதாய் இயற்கையின் நிலநடுக்கம், போன்ற சீற்றம் காரணமாகவும், வெளிநாட்டார் படை யெடுப்பு,சிதலை, இராமபாணம் போன்றவைகளின் தாக்குத லாலும் பல ஏடுகள் அழிந்தவை போக மிகுந்தவைகளில் சில மேலைநாட்டு நூல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்

பட்டன

12

என்பனவும் முறையாகப் பாதுகாத்து வைக்காத காரணத்தால் சுவடிகள் பல அழிந்துபட்டன மேலைநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன என்னும் செய்திகளை உணர்த்துகின்றன.

சில

மூடப்பழக்கம் : இவற்றையெல்லாம்விடத் தமிழரின் பழக்கவழக்கங்களும், அவற்றின் உண்மையறியாது அப்பழக்க வழக்கங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றிய தமிழ்மக்களின் அறியாமையும் பெருவாரியான தமிழ்ச்சுவடிகளை அழித்து ஒழித்திருக்கின்றன. இவ்வுண்மை,

"பழைய ஏடுகளைக் கண்டகண்ட இடங்களிலே போடக் கூடாதாம். அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்து விட வேண்டுமாம். இங்கே அப்படித்தான் செய்தார்கள்”18 என்று கரிவலம் வந்த நல்லூர் தேவஸ்தானத்தில் ஒருவர் கூறிய கூற்றால் தெளிவாகும்; மேலும்,

"எங்கள் வீட்டில் ஊர்க்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக் கணக்காக இருந்தன... அவற்றில் என்ன இருக்கிறதென்று 10.லண்டன் தமிழ்ச்சங்க ஆண்டுமலர், பக். 48-49.

11. பெருந்தொகை, முகவுரை.

12. அனுபோகவைத்திய நவநீதம், முன்னுரை, பக். 11. 13. என் சரித்திரம், பக். 928.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/77&oldid=1571150" இலிருந்து மீள்விக்கப்பட்டது