உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

சுவடி இயல் எனக்குத் திறமை இல்லை...ஆடிப்

பார்ப்பதற்கோ பதினெட்டில் சுவடிகளைத் தேர் போலக் கட்டிவிடுவது சம்பிர தாயமென்றும் சில முதிய பெண்கள் சொன்னார்கள். நான் அப்படியே எல்லா ஏடுகளையும் ஓர் ஆடிமாதம் பதினெட்டாந் தேதி வாய்க்காலில் விட்டுவிட்டேன்”!

என்பது திருநெல்வேலி, தெற்குப் புதுத்தெருவு, வக்கீல் சுப்பையா பிள்ளை கூறியது. இதுவும் சுவடிகள் அறியாமையால் அழிந்தன என்பதைப் புலப்படுத்துகிறது.

நெருப்பிலிடு

முன்னோரைப் பின்பற்றியதில் அறியாமை : வதும் நீரில் விடுவதுமாகிய இச்செயல்கள் முன்னோர்களால் கையாளப்பட்டுவந்தது உண்மையே. ஆனால் அவர்களின் செயல் கள் அறியாமையால் நிகழ்ந்தனவல்ல. நீண்ட நாட்களாய்ப் பயன் படுத்தப்பட்ட சுவடிகள் மேலும் பயன்படுத்த முடியாத நிலையில் பழுதாகிவிட்டால் புதியபடி எழுதிக்கொள்ளுவது உண்டு. அவ்வாறு புதியபடி ஒன்று எழுதிக்கொண்டபின் பழைய சுவடி பயனற்றதாகிறது. மேலும் அதுபோன்ற சுவடிகளை வைத்துப் பாதுகாப்பதும் கடினம். அச்சுவடிகள் ஏடு ஏடாகச் சிதறி மிதிபட்டு அழியக்கூடாது என்ற கருத்தில் அவை நீரில் விடப் பட்டன; ஆகுதியிலிடப்பட்டன. அச்செயல்களை மட்டும் கண் டிருந்த முதியவர்கள் படியெடுத்த செயலைவிட்டு, ஆண்டுதோறும் ஆற்றில் விடுவதை ஒரு மரபாகக் கொண்டு மக்களிடையே பரப்பினர். அதைக் கேட்ட பிறரும் காரணமறியாது பின்பற்றினர். இம்முறைகேடான பழக்கம் மக்களிடையே பரவியபொழுது, அச் சுவடிகளைப் படித்தறியும் பழக்கமும் திறனும் குறைந்து வந்தன. இச்சூழ்நிலைகளே மிகப்பல சுவடிகளின் அழிவிற்குக் காரணங்

களாயின.

ஆ. சுவடி திரட்டுதல்

முன்னுரை : சுவடிதிரட்டும் பணி சங்ககாலத்திலேயே தொடங்கியுள்ளது. ஆயினும் இடைக்காலத்தே இயற்கைச் சூழல்கள், செயற்கைத் தன்மைகள், அறியாமை ஆகியவற்றால் சுவடிகள் பல அழிந்துபட்டன. அவையும் கேட்பாரற்றுக் கிடந்தன. ஆய்வுத் திறனுடைய சிலரால் சுவடிதிரட்டும்பணி மேற் கொள்ளப்பட்டது. அச்சு வசதி ஏற்பட்டபிறகு மொழியுணர்வும். பழம்பொருளுணரும் ஆர்வமும். நிலையான பணிபுரியும் வேட்கையு 14, மேற்படி பக். 934.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/78&oldid=1571151" இலிருந்து மீள்விக்கப்பட்டது