உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிவும் திரட்டுதலும்

63

இம்

முடைய சான்றோர் சிலர் தங்களால் இயன்றவரை சுவடிகளைத் திரட்டி அச்சிட்டு வெளியிடத் தொடங்கினர்; சில நிறுவனங்களின் மூலமும் திரட்டிவைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். முயற்சியில் அரசினரும் பங்குகொண்டனர். அப்பணி இன்றும் நடைபெற்று வருகிறது; தொடர்ந்து நடைபெற வேண்டியுள்ளது. இச்செய்திகளையும் அவற்றாலாம் பயன்பாடுகளையும் இப்பகுதி ஆய்வு செய்கிறது.

சுவடிதிரட்டுதலில்

-சங்ககாலப்பணி-மன்னர்பணி :

தமிழ்

மன்னர் பலர் பலவிடத்தும் வாழ்ந்துவந்த பெரும் புலவர்களை ஒன்றுகூட்டினர். இடம் அமைத்து உதவினர். பல நூல்களைத் தொகுக்கச் செய்தனர். எழுதச்செய்தும் பாதுகாத்துவந்தனர். இதனை,

“இத்தொகை முடித்தான் பூரிக்கோ ; இத்தொகை பாடியகவிகள் இருநூற்றைவர். இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது.' என்னும் தொன்மைச்சான்றே நன்கு புலப்படுத்தும். மேலும்,

15

"பலவகை நூல்களும் செய்யுட்களும் கால நிலையினால் தமிழ் நாட்டவரால் புறக்கணிக்கப்பட்டோ வேறுவகையில் மறைந்தோ அருகின போலும். பிறகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த புலவர்களும் அரசர்களும் தமிழா ராய்ச்சியில் ஊக்கங்கொண்டு பழந்தமிழ்ச் செய்யுட்களைத் தொகுக்கத் தொடங்கினர். அங்ஙனம் தொகுத்தனவே பாட்டு, தொகை, கீழ்க்கணக்கு என்ற மூன்றுவகை நூற் றொகுதிகளாதல் வேண்டும்’” x 6

என்பார் உ. வே. சா. இதனால் சங்க நூல்கள் யாவும் பலவிடத் திருந்தும் திரட்டித் தொகுக்கப்பட்டனவே என்பது தெளிவா

கிறது.

அறிஞர், புலவர் பணி:

மன்னரின் ஆதரவோடு புலவர் பெருமக்களும் தமிழறிஞர்களும் சுவடிகளைத் திரட்டித் தொகுப் பதில் பெரும்பங்கு கொண்டிருந்தனர். இப்பணியினை நன்கு உணர்ந்த சான்றோர்,

15.குறுந்தொகை, நூல் இறுதி.(சுவடிகளில்)

16. குறுந்தொகை, முன்னுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/79&oldid=1571152" இலிருந்து மீள்விக்கப்பட்டது