உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

“இத்தனை நாமெல்லாம்

முதுமக்களது அரும்பெரும்

சுவடி இயல் வாக்குகளை

அறிந்து சுவைக்கும்படி திரட்டிக்கொடுத்த பழைய சான்றோர்களை யாம் எங்ஙனம் புகழவல்லோம்! என்று கூறி அவர்களைப் பாராட்டினர். மேலும்,

6

“நாட்டில் அங்கங்கே சிதறிவழங்கிய தனிப்பாக்களை முயன்று ெ தொகுத்துக் குறிப்புக்களுடன் இன்னோர் நமக்களித்திலரேல், சங்ககாலத்துப் புலவர்களின் அருமைப் பெயர்களையேனும், பெருமைச் செய்திகளையேனும், முற்காலத்து நிலைமை நிகழ்ச்சிகளையேனும் நாம் சிறிதேனும் அறிய

முண்டோ?’’18

என்று கூறி நன்றி செலுத்தினர்,

"சங்ககாலச் சான்றோர்கள் அவ்வப்போது பாடிய புறத்திணைக் குரிய பாட்டுக்களுள், நானூறு பாட்டுக்களைத் தேர்ந்து, பண்டைநாளைச் சான்றோர் ஒருவரால் தொகுக்கப்பெற்றது இப்புறநானூறு என்பது உலகறிந்த செய்தி.19

என்று

பாராட்டி அச்சுவடியை ஆய்ந்து பதிப்பித்தனர். இச் சான்றோர் கருத்துகள் சங்க நூல்கள் திரட்டித் தொகுக்கப் பட்டனவே என்பதை வலியுறுத்துகின்றன.

இ.

சுவடிதிரட்டுதலில்-இடைக்காலப்பணி

சமயச் சார்புடைய நூல்கள் பல தேவாலயங்களிலும் மடாலயங்களிலும் திரட்டிப் பாதுகாக்கப்பட்டன; பல்லவர், சோழர் காலத்தில் ஆலயங்கள் கல்விச் சாலைகளாகவும் விளங்கின; பாண்டிய மன்னர் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்தனர்; அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட நூல்கள் பல தமிழ்ச்சங்கத்தில் திரட்டி வைக்கப்பட்டன என்னும் செய்திகள் இடைக்காலத்தில் சுவடி களைத் திரட்டிப் பாதுகாத்ததை எடுத்துக் காட்டுகின்றன. வரலாற்றுச் சான்று

இராசராசன் தேவாரப்பாக்களைத் திரட்டி முறைப்படுத்த எண்ணினான். அதற்கு உதவி அதற்கு உதவி செய்பவர் செய்பவர் நம்பியாண்டார் நம்பி என்பவரே என்பதை வல்லார் கூறக்கேட்டுத் திருநாரையூர் சென்றான். அவரிடம் தன் கருத்தை அறிவித்தான்...

17. தனிச்செய்யுட் சிந்தாமணி, முகவுரை. 18. பெருந்தொகை, முகவுரை, பக். 2.

19. புறநானூறு, கழகம், முன்னுரை, பக். V.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/80&oldid=1571153" இலிருந்து மீள்விக்கப்பட்டது