உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிவும் திரட்டுதலும்

65

ஏடுகள் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் மேற்றிசையில் மூவர் கையிலச்சினை பெற்ற காப்பினையுடைய அறையில் இருத்தலை உணர்த்தினார். அரசன் அவருடன் பொன்னம்பலம் சென்று தில்லைவாழ் அந்தணர் கூறியபடி அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் படிமங்களை ஊர்வலமாக வரச்செய்து அரண்மிக்க அறையிலிருந்த தேவார ஏடுகளை எடுத்தான்.

சில ஏடுகள் புற்றினால் அழிந்து கிடந்தன. எஞ்சியவற்றை நம்பியார் முறைப்படுத்தினார்.

வச்சிரநந்தி என்னும் சமணப்பெரியார் திரமிளசங்கம் என்னும் தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பல சுவடிகளைப் பாதுகாத்து வைத் திருந்தார் என்பன வரலாற்றுச் செய்திகள்.’20

இலக்கியச்சான்று

பெருங்கதை மூன்றாங்காண்டத்தினிறுதியில்,

"முன்னாளின் மூவருரைகண்ட சோழன் முறைமையைப்போல் இந்நாளிலே கொங்கு வேண்மாக் கதை கண்டெழுதுவித்தான் பன்னாளுங் கீர்த்திப் பழைசை யடைஞ்சான்மெய்ப் பாலினியன் நன்னா வலர்புகழ் சின்னடைஞ் சான்றொண்டை

நாட்டவனே"

என்னுங் கட்டளைக் கலித்துறை காணப்படுகிறது, இதனால் மூவரருளிச்செய்த திருமுறைகளைப் போலவே இந்நூல் பண்டைக் காலத்திலேயே படிப்பாரும் ஆதரிப்பாருமின்றி அருகி வழங்கி வந்தது என்பதும், அத்திருமுறைகளில் அருமையறிந்து முயன்று பெற்றுக் கிடைத்த அளவில் எழுதுவித்த திருமுறை கண்ட ராஜ ராஜ அபய குலசேகர சோழ மகாராசாவைப் போலவே இதன் அருமையறிந்து முயன்று பெற்றுக் கிடைத்த அளவில் எழுதுவித்த உபகாரி பழைசை என்னும் ஊரிலுள்ள அடைஞ்சான் என்ப வருடைய புதல்வராகிய சின்னடைஞ்சான் என்னும் பெயரின ரென்பதும்... வெளியாகின்றன.

1

இந்த இலக்கிய இறுதிப் பாடலும் பதிப்பாசிரியர் விளக்கமும் தேவாரத்திருமுறைகளைத் தொகுத்த செய்தியைப் புலப்படுத்து

கின்றன.

20. சோழர் வரலாறு, இருண்டகாலம், பக். 90. 21. பெருங்கதை, முகவுரை, பக். 165.

சு வ.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/81&oldid=1571154" இலிருந்து மீள்விக்கப்பட்டது