உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

சுவடி இயல்

கல்வெட்டுச்சான்று

66

'அகத்திய னொடு தமிழாய்ந்தும் .......

  • 32

நூற்கடலைக் கரைகண்டு நோன்பகடா யிரம் வழங்கியும் மன்னெதிரா வகைவென்று தென்மதுரா புரஞ்செய்தும் அங்கதனி லருந்தமிழ்நற் சங்கம் இரீஇத் தமிழ்வளர்த்தும்" "வளமதுரை நகர்கண்டும் மற்றதற்கு மதில்வகுத்தும் உளமிக்க மதியதனால் ஒண்டமிழும் வடமொழியும் பழுதறத்தா னாராய்ந்து பண்டிதரில் மேந்தோன்றியும் என்பன செப்பேட்டுச் செய்திகள். இவற்றால் இவற்றால் இடைக்காலத் தமிழ் மன்னர் சுவடிகள் திரட்டுவதில் பங்கு கொண்டிருந்த நிலை தெளிவாகிறது.

ஈ. சுவடி திரட்டுதலில்- பிற்காலப்பணி

128

பாதுகாக்கும் நிலையில் சுவடி திரட்டுதல் : தமிழ்மன்னர் ஆட்சிக்குப்பிறகு அந்நியராட்சிக்காலத்தில் பலவாறான அழிவுகளி லிருந்தும் தப்பிய தமிழ்ச்சுவடிகள் பிற்காலத்தில் ஓரளவு தேடித் திரட்டப்பட்டுப் பாதுகாக்கப்பெற்றுள்ளன. அவ்வாறு திரட்டும் பணிகள் முறையே காலின் மெக்கன்சி, அ.முத்துசாமிப்பிள்ளை. எடோர்ட் ஏரியல், சரபோஜி மன்னர், பாண்டித்துரைத் தேவர் நிறுவிய தமிழ்ச் சங்கத்தினர், வி.கனகசபைப் பிள்ளை ஆகியோ ரால் சிறப்புற மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மெக்கன்சி : 1753இல் ஸ்காட்லாந்தில் பிறந்த காலின் மெக்கன்சி, தமது இருபத்தொன்பதாவது வயதில், ஆங்கில அரசுப் படையின் ஒரு பிரிவுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டுச் சென்னை யில் தங்கினார். ஈழத்திற்குச் சென்றபோது, ஈழம்பற்றிய செய்தி களையும் தொல்பொருள்களையும் திரட்டத் தொடங்கினார், தொடர்ந்து தென்னிந்தியா முழுவதிலும் இப்பணியை மேற் கொண்டார். லார்டு மிண்டோ பிரபுவின் அனுமதி பெற்று ஜாவாவில் சுவடிகளையும் செய்திகளையும் திரட்டினார். இறுதியாக இந்தியா முழுவதிலும் இப்பணியை மேற்கொண்டிருக் கிறார்.

1811 இல்

இலட்சுமணய்யா போன்ற அறிஞர்களைத் தம் சொந்தச் செல வில் இப்பணிக்காக அமர்த்திக்கொண்டு, அவர்களைக் கிராமங்கள்

22. தளவாய்புரச் செப்பேடு, பக். 35-47.

23. சின்னமனூர் பெரிய செப்பேடு, பக். 19-21.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/82&oldid=1571155" இலிருந்து மீள்விக்கப்பட்டது