உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிவும் திரட்டுதலும்

67

தோறும் அனுப்பி இவற்றைத் திரட்டியிருக்கிறார். இவரது சுவடி களுள் பெரும்பாலானவை வரலாற்றுச் செய்திகௗடங்கியவையே யாகும். அவையும் செல்வாக்குமிக்க மக்களிடம் எழுதிவாங்கப் பெற்றவையாகும். எவ்வாறாயினும் அந்நியர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் சுவடி திரட்டும் பணிக்கு வித்திட்டவர் காலின் மெக்கன்சியே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1821இல்

மெக்கன்சி சுவடிகள் : மெக்கன்சி இறந்தபிறகு கவர்னர் ஜெனரல் ஹேஸ்டிங்ஸ் பிரபு திருமதி மெக்கன்சியிட மிருந்து அச்சுவடிகளைப் பத்தாயிரம் பவுன் விலை கொடுத்து, கம்பெனி சார்பாக வாங்கினார். பிறகு வில்சன் என்பவரால் அட்டவணைப்படுத்தப்பட்டன. அவற்றுள் ஒருபகுதி இங்கிலாந்திற்கு அனுப்பப்பெற்று இந்திய அலுவலக நூலகத்தில் வைக்கப்பெற்றுள்ளது. ஒருபகுதி கல்கத்தா பண்டைப்பொருள் சேமிப்பு நிலையத்தில் இருக்கிறது. தென்னாட்டுச் சுவடிகள் சென்னை, அரசினர் சுவடி நூலகத்தில் இருக்கின்றன.

அவை

லெய்டன் : 1803 முதல் 1811 வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துவந்த டாக்டர் லெய்டன் என்பவர் லெய்டன் என்பவர் ஓலைச்சுவடி களைத் திரட்டியுள்ளார். அவை தமிழ் உட்பட பலமொழிகளில் ஆனவை. அச்சுவடிகளையும் கிழக்கிந்தியக் கம்பெனியார் விலைக்கு வாங்கி லண்டனில் உள்ள இந்திய அலுவலக நூலகத்தில் வைத்தனர்.

பிரெளன் : 1837க்குப் பிறகு இந்திய அரசுபணியில் (Indian Civil Service) உயர் அலுவலராகப் பணியாற்றிய சி. பி. பிரெளன் என்பவர் சிறிது சிறிதாகப் பல சுவடிகளைத் திரட்டினார். அவை பெரும்பாலும் தாள்-சுவடிகள். சி. பி. பிரெளனின் முயற்சியால் இலண்டனிலிருந்த டாக்டர் லெய்டன் திரட்டிய சுவடிகள், லெய்டனின் மறைவுக்குப் பிறகு இந்தியாவிற்குக் கொண்டுவரப்

பெற்றன. மெக்கன்சி, லெய்டன் ஆகியோர் திரட்டிய சுவடி களுடன் பிரௌன் திரட்டிய சுவடிகளையும் அவ்வப்போது சென்னைக் கல்விச் சங்கத்தில் சேர்த்துப் பாதுகாக்கச் செய்தனர். இம்மூவரின் சுவடிகளு ம் 1855ஆம் ஆண்டுவரை இக்கல்விச் சங்கத்தில் சேர்க்கப்பெற்றுள்ளன. இவை 1870இல் சென்னை, மாநிலக்கல்லூரிக்கு மாற்றப்பட்டன, பேராசிரியர் பிக்போர்டு அவர்களின் தலைமையில் இவற்றிற்கு விளக்க அட்டவணையும் தயாரிக்கப்பட்டது.24

24. அரசினர் சுவடி நூலக அட்டவணைகளிலிருந்து திரட்டப் பட்டவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/83&oldid=1571156" இலிருந்து மீள்விக்கப்பட்டது