உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

சுவடி இயல் அரசினர் சுவடி நூலகம்: மேற்குறிப்பிட்ட சுவடிகளையும் விளக்க அட்டவணைகளையும் கொண்ட தனி நூலகம் ஒன்று 1939 சனவரியில் அமைக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகக் கட்டிடத்தில் அமைக்கப்பெற்ற இந்நூலகம் இன்றுள்ள, பெரிய, அரசினர் சுவடி நூலகமாகும். தமிழ்நாடு அரசு தமிழ்நாடு நூலகத்தின் மூலம் தொடர்ந்து சுவடிகளைத் திரட்டி, முறைப் படுத்தி, சுவடிகளின் அகரவரிசைப்பட்டியல், விளக்க அட்டவணை ஆகியவற்றை வெளியிட்டுப் பாதுகாத்துவருகிறது.

மிகப்

இந்

எல்லிஸ் : வீரமாமுனிவர் எழுதிய ஏட்டுச்சுவடிகள் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்தன. 'பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் என்பவர் சென்னை மாவட்ட ஆட்சியாளராக இருந்தபோது 1816இல், சென்னைக் கல்விச்சங்க மேலாளராக இருந்த புலவர் முத்துசாமிப் பிள்ளையைத் தமிழ் மாவட்டங்களுக்கு அனுப்பி வீரமாமுனிவர் எழுதிய சுவடிகளைத் திரட்டச்செய்தார். அதன்படி தென்னாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திரட்டப்பெற்ற சுவடிகளுள் கொடுந் தமிழ், சதுரகராதி, தேம்பாவணி, பரமார்த்த குருவின் கதை, பேதக மறுத்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை; முழுமை யானவை. அவை தொடர்ந்து அச்சிடப்பெற்றன.

சரபோஜி மன்னர் : தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி அவர்களின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 1798-1832) சித்த, ஆயுள்வேத, யுனானி மருத்துவ ஏடுகள் எல்லாம் சரசுவதிமகால் நூல் நிலையத்தில் அரியணை ஏறின.26

எடோர்ட் ஏரியல் : புதுச்சேரியில் கடற்படைத் தளபதியாகப் பணிபுரிந்த எடோர்ட் ஏரியல் என்னும் பிரஞ்சுக்காரர் 1854 வரை ஓலைச்சுவடிகளையும் அச்சிட்ட நூல்களையும் திரட்டி வைத்திருந் தார். அவருடைய மரணத்திற்குப் பிறகு அவை பாரிஸ் தேசிய நூல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளன

பாண்டித்துரைத்தேவர் :

(சுமார் 1880)

"மதுரையம் பெரும்பதியில், ஸ்ரீபாண்டித்துரைத் அவர்கள் தமிழ்ச்சங்கம் தமிழ்ச்சங்கம் நிறுவினார்கள்... இச்சங்கத்தின் இச்சங்கத்தின்

27

தேவர் அங்கங்

களுள் ஒன்றாக, தமிழ் நாட்டிலுள்ள அரிய தமிழ் நூல்களனைத்தை யும் ஒன்றாகத் தொகுத்து வைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன்

25. அச்சும் பதிப்பும், பக். 84.

26. அனுபோக வைத்திய நவநீதம், பக். 11. 27. அச்சும் பதிப்பும், பக். 193.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/84&oldid=1571157" இலிருந்து மீள்விக்கப்பட்டது