உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிவும் திரட்டுதலும்

69

'பாண்டியன் புத்தகாலயம்' ஒன்றும் நிலையிடப் பெற்றது. அச்சில் வாராத தமிழ் நூல்கள் நூற்றுக்கணக்காக இப்புத்தகாலயத்தில் தொகுக்கப் பெற்றன.

9:28

கனகசபைப்பிள்ளை (சுமார் 1890)

சென்ற இடங்களில் எல்லாம் அச்சில் வாராத தமிழ் நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தேடிப் பெறுகின்ற முயற்சியைக் கைக் கொண்டவர் கனகசபைப்பிள்ளைவர்கள். ஏராளமான ஏட்டுப் அவற்றைத் தாளிற்

பிரதிகளைத் தொகுத்து வைத்திருந்தார். பெயர்த்தெழுதுவதற்கு அப்பாவுப்பிள்ளையென்ற ஒருவரை அமர்த்தி 20 ஆண்டுக் காலமாகத் தம்முடனே வைத்துக் கொண் டிருந்தார்.29

ரா. இராகவையங்கார் (1900)

இராகவையங்கார் அவர்கள் அரிதில் தொகுத்த ஏட்டுச் சுவடிகள் இப்பொழுது பலருக்கும் பயன்படுமாறு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

80

திருநெல்வேலி - ஈசுவரமுர்த்திப்பிள்ளை: திருநெல்வேலி மேலை வீதியில் உள்ள கவிராஜ ஈசுவரமூர்த்திப்பிள்ளை வீட்டில் இருந்த புத்தக அறையைக்கண்ட உ.வே.சா. அவர்கள், தமிழ்ச் சங்கத்தில் முன்பு இப்படித்தான் சுவடிகளை வைத்திருந்தார்களோ என்று விம்மித மடைந்தாராம். ஏட்டுச் சுவடிகளை அடுக்காகவும் ஒழுங் காகவும் வைத்திருந்தார்கள்...புழுதி இல்லை; பூச்சி இல்லை; ஏடுகள் ஒன்றோடொன்று கலக்கவில்லை என்று கூறி வியப்படைகிறார். வியப்படைந்த உ.வே.சா. அவர்களைக் கண்ட கவிராஜ ஈசுவர மூர்த்திப்பிள்ளை அவர்கள், 'இந்த வீடு ஒன்றுதான் இப்படி இருக்கிறதென்று நீங்கள் நினைக்க வேண்டாம். இங்கே இன்னும் சில வீடுகளில் பலவகையான ஏட்டுச்சுவடிகள் இருக்கின்றன... ஸ்ரீவைகுண்டம் முதலிய ஊர்களில் ய பல கவிராயர்கள் வீடுகள் உண்டு. ஆயிரக் கணக்கான ஏடுகளை அவ்வீடுகளிற் காணலாம்”உட என்று கூறினாராம். இவ்வாறு நிறுவனங்கள், தனியார் என்ற பாகுபாட்டில் சுவடிகள் திரட்டப்பெற்றன. என்றாலும், அனைத்தும் பாதுகாத்துவைக்கும் நோக்கமுடையனவாகவே அமைந்தன. அக் காலக்கல்வி முறையில் சுவடிகளைத் தேடிப்

28. தமிழ்ச்சுடர்மணிகள், பக். 391. 29. ஷெ. பக். 276. 30. ஷெ. பக். 325.

31. என்சரித்திரம், பக், 873-874.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/85&oldid=1571158" இலிருந்து மீள்விக்கப்பட்டது