உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

சுவடி இயல் பெற்றே கற்க வேண்டிய சூழ்நிலை காணப்பட்டமையின் கற்பதற் காகச் சுவடியைத் தேடித் திரட்டிய சில நிகழ்ச்சிகளையும் வேண்டியுள்ளது.

காண

கற்கும் நிலையில் சுவடிதிரட்டுதல் : தொடக்ககல்வியை முடித்தபின் ஒருசிலர் மேலும் சில சிறந்த நூல்களைக் கற்க விரும்பி னார்கள். விரும்பியவர்கள் தாம் விரும்பிய நூலைக் கற்பிக்கும் ஆசிரியரைத் தேடிச் சென்றனர். விரும்பிய நூலைப் பலவிடத்தும் தேடிச் சென்றே பெற்றனர். பெற்ற நூல்களைப் படியெடுத்துக் கொண்டு உரியவரிடம் திருப்பிக்கொடுத்து வந்தனர்.

கற்பதற்காக நூல்களைத் திரட்டியவரின் அனுபவங்கள் கல்வியில் ஊக்கமளிக்க வல்லவையாகும்.

66

மீனாட்சி சுந்தரம்பிள்ளை : 'அக்காலத்தில் நூல்கள் பெரும் பாலும் அச்சிற்பதிக்கப்படாமையால் படிப்பவர்கள் அவற்றைப் பிரதிசெய்து படித்தல் இன்றியமையாத வழக்கமாக இருந்தது.

+82

ஒருசமயம் திரிசிரபுரத்தில் பரதேசி ஒருவர் வந்திருந்தார். அவர் நன்றாகப் படித்தவர் என்பதையும் அவரிடம் தண்டியலங் காரப் பிரதி இருப்பதையும் கேள்வியுற்றார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. எவ்வாறேனும் அவரிடம் தண்டியலங்காரத்தைப் பெற்றுப் பாடங்கேட்க வேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டார். அவர் பிச்சையெடுக்கவரும் காலமறிந்து தெருத்தோறும் கூடவே தொடர்ந்து பேசிக்கொண்டு செல்வார். அவருக்குப் பிரியமான கஞ்சாவை வாங்கிவைத்திருந்து உரியகாலத்தில் அவருக்குக் கொடுப்பார். பலநாட்களுக்குப்பின், ஒருநாள் அவர் உவகையோடு இருந்த சமயத்தில் தம் கருத்தை மெல்லப்புலப்படுத்தி, அவரிட மிருந்த புத்தகத்தைப் பெற்று எழுதிக்கொண்டு பாடமுங்கேட்டார். இவ்வாறு ஐந்திலக்கணங்களையும் முறையே தெரிந்தவர்களிடம் சென்று இவர் கற்றுக்கொண்டார்.38

பிள்ளைவர்கள் கந்தபுராணம், பெரியபுராணம்... ஆகியவற்றில் இருந்த ஐயங்களைக் முதலியாரிடத்தும்,

காஞ்சிபுரம் சபாபதி

கல்லாடம், திருவாசகம்...ஆகியவற்றிலிருந்த ஐயங்களைத் திருவம் பலத்தின்னமுதம் பிள்ளையிடத்தும் கேட்டுத் தெளிந்தார்... இம் மூவரிடமும் இருந்த அரிய நூல்களைப் பெற்றுப் பிரதி செய்து

32. மீனாட்சி சுந்தரம்பிள்ளை சரித்திரம், பக். 10.

33.

ஷை

பக். 19-20.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/86&oldid=1571159" இலிருந்து மீள்விக்கப்பட்டது