உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிவும் திரட்டுதலும்

71

கொண்டு பாடங்கேட்டு வந்தார்.34 ஐந்திலக்கணங்களையும் பல லக்கியங்களையும் கற்க விரும்பிய திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள், அவற்றைச் சுவடிகளில் எழுதிவைத்தே படிக்க வேண்டியிருந்த சூழ்நிலையில் கஞ்சாவை வாங்கிக் கொடுக்கவும் தயங்கினாரில்லை. இவ்வாறு தமிழ்ச் சான்றோர் பலரும் "எத்திறத்து ஆசான் உவக்கும் அத்திறம்

அறத்தில் திரியாப் படர்ச்சிவழி பாடே. 5

என்னும் வழிபாட்டிலக்கணத்திற்கு இலக்கியமாய் நின்று கற்றிருக் கின்றனர் என்பதற்குப் பிள்ளையவர்கள் எடுத்துக்காட்டாகிறார். ஒவ்வொரு நூலையும் தக்கார் ஒருவரை நாடிச்சென்று கற்றிருக் கின்றனர் என்பதற்கும் அவர் சான்றாகிறார்.

உ.வே.சாமிநாதையர் :

பிள்ளையவர்களுடைய

மாணாக்க

ராக விளங்கிய உ.வே.சா. அவர்களும் இவ்வகையில் கற்றவரே என்பதற்குப் பல சான்றுகள் கிடைக்கின்றன.

முதன்முதலில் சடகோபையங்கார் தாம் இயற்றிய ஆலந்துறை யீசர் பதிகத்தை உ.வே.சா.வுக்குக் கற்பித்தார். அடுத்து கார்குடி கஸ்தூரி ஐயங்காரிடம் உ.வே.சா.வின் தந்தை அழைத்துச் சென்ற போது "நான் பாடம் சொல்லுவதற்கு ஒருதடையும் இல்லை. கார்குடிக்கு வந்தால் வேண்டிய சௌகரியம் செய்வித்து இவனைப் படிப்பிக்கிறேன்”

என்றார் கஸ்தூரி ஐயங்கார். கார்குடியில் கஸ்தூரி ஐயங்காரும் சாமி ஐயங்காரும் தங்கள் தங்களால் இயன்ற அளவு பாடம் சொல்லிவந்தார்கள். விருத்தாசலரெட்டியாரிடம் சென்றபோது 'நீர் நன்னூல் காண்டிகை உரையைப்

பாடங்

கேட்டிருத்தலால் நான் முதலில் யாப்பருங்கலக்காரிகையைப்

பாடம் சொல்லுகிறேன் என்று கூறிக் கரரிகையைத் தொடங் கினார்.87 இறுதியாக மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடத்தில் உ.வே.சா.வை அழைத்துச் சென்ற அவருடைய தந்தையார் “தங்களுடைய உத்தரவு இல்லாமல் இவன் எங்கும் செல்ல மாட்டான்...அதிக ஆவலுடன் தங்களிடம் அடைக்கலம் புக இவன் வந்திருக்கிறான்... தங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்” என்று கூறி அங்கேயே விட்டுவந்தார். பல ஆசிரியரையும் தேடிச்சென்று அடைக்கலம் புகுந்து பல நூல்களைக் கற்றவர் உ.வே.சா. என்பதை இவ்வரலாறுகள் கூறுகின்றன. இவ்வாறு 34. ஷெ. பக். 59-60. 35. நன்னூல்,நூற்.46.

36. என் சரித்திரம், பக். 148-153 37.ஷை. பக். 198 38. ஷெ. பக். 231.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/87&oldid=1571160" இலிருந்து மீள்விக்கப்பட்டது