உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

சுவடி இயல் ஆசிரியரைத் தேடிச்சென்றவர்கள் சுவடிகளையும் பல ஊர்களுக்குக் கால்நடையாகவே சென்று தேடிப்பெற்றுக் கற்றிருக்கின்றனர்.

பிறர் படிப்பதற்காக - சுவடிதிரட்டியமை : திருக்குற்றால யமக அந்தாதியையும் திருக்குற்றாலப் புராணத்தையும் படிக்கவிரும்பிய மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்குச் சண்பகக் குற்றாலக் கவிராயர் அச்சுவடிகளை வருவித்துக் கொடுத்திருக்கிறார். 3 9

8

சிவதருமோத்திரம் என்னும் நூலைப் படிக்கவிரும்பினார் பிள்ளையவர்கள். அச்சுவடி திருச்சியில் தேசிகர் ஒருவரிடம் இருந்தது. அவர் கொடுக்க மறுத்து விட்டார். செய்தியறிந்த பிள்ளையவர் களின் மாணாக்கராகிய சுந்தரம்பிள்ளை என்பவர் கனவானைப் போல வேடந்தரித்துச் சென்று பலவாறு நடித்து அச்சுவடியினைப் பெற்று வந்தளித்திருக்கிறார்.

40

இவையாவும் படிப்போருக்கு உதவச் சுவடிகளைத் தேடித் தந்த நிலையை உணர்த்துவனவாகும்.

அச்சிடுதற்காகச்

சுவடிதிரட்டுதல் : சுவடிகளைப் பாது காக்கும் பொருட்டும் கற்க வேண்டியும், நிறுவனங்களும் தனியார் பலரும் செயல்பட்டுள்ளனர். அடுத்த நிலையில் அச்சிடும் வசதிகள் ஏற்பட்ட பிறகு பலர் தமிழ் நூல்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பரந்த நோக்கம் கொண்டனர். தாங்கள் கற்றுச் சுவைத்த நூல்களையும், கற்றுச் சுவைத்தவர் கூறிய பிற நூல்களையும் தமிழர் அனைவரும் சுவைக்குமாறு செய்ய வேண்டும் என்று விரும்பினர். மேலும் ஏட்டு வடிவில் வைத்துக் கற்போர் மிகக் குறைந்தவர்களே ஆதலின் பலரும் கற்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் எண்ணினர். இக்காரணங்களால் ஏடுகளை முயன்று தேடிப் பதிப்பிக்கத் துணிந்தோர் பலராவர். அவர்களின் முயற்சியால் பலவழிகளில் ஏடுகள் திரட்டப்

பட்டுள்ளன.

சி. வை. தாமோதரம்பிள்ளை : சி.வை.தாமோதரம் பிள்ளை யவர்கள் இலக்கண விளக்கம் என்னும் நூலைப் பதிப்பித்தபோது அந்நூலின் இறுதி இயல்களுக்குச் சுவடிகள் கிடைக்கவில்லை. அச்சிடப்படாமல் கிடக்கும் நூல்கள் இவ்வாறு விரைவில் அழிந்து விடுகின்றன என்பதை உணர்ந்த அவர் 'சொற்பகாலத்திற்கு

39. ஷெ. பக். 304.

40. மீனாட்சிசுந்தரம்பிள்ளை சரித்திரம், பக். 110-111.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/88&oldid=1571161" இலிருந்து மீள்விக்கப்பட்டது