உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிவும் திரட்டுதலும்

1

73

முன்னர் உதித்த இந்நூலின் கடைசி இயல்களுக்குத் தமிழ் நாட்டிலே பிரதிகள் அகப்படாமையும்..... சான்றுபகரும் என்கிறார் மேலும், "பழைய சுவடிகள் யாவுங்கிலமாய் அழிந்து போகின்றன. புது ஏடுகள் சேர்த்து அவற்றை எழுதி வைப்பாரும் இலர். துரைத்தனத்தாருக்கு அதன்மேல் இலட்சிய மில்லை. சரஸ்வதியைத் தம்பால் வகிக்கப்பெற்ற வித்துவான் களை அவள் மாமி எட்டியும் பார்க்கின்றாளில்லை42 எனவும்,

"சரஸ்வதியின் திருநடனஞ் சொலிக்கப்பெற்றனவாகிய சங்க மரீஇய நூல்கள் சிதைந்தழியவும், அவைகளில் அவர்களுக்குச் சற்றேனுந் திருட்டி சென்றிலது. இதனைக் கண்டு சகிக்கலாற்றாது மனநொந்து அழிந்துபோகுஞ் சுவடிகளை இயன்றமட்டுந்தேடிப்... பரிசோதித்து அச்சிடுவித்தேன்” எனவும் கூறும் சி. வை. தா. அவர்கள், அவ்வாறு தாம் அச்சிடத்துணிந்தமைக்குரிய காரணத் தைத் தொல்காப்பியப் பதிப்பின் போதும் வலியுறுத்துகிறார்.

"ஐயந்திரிபறத் தாங்கற்றறியாததோர் நூலை இவர் இங்ஙனம் வழுவுற அச்சிடவேண்டியதென்னையென யாரும் வினவுவாராயின்

வழுச்செறிந்ததாயினும்

அடியோடழிந்து போகின்ற

நூலை

அடியேன் பாதுகாத்தது பேருபகாரமன்றோவென்க’** என்பது அப்பதிப்புரைக் கூற்று. சிறந்த தமிழ் நூல்கள் சுவடிகளாகவே இருந்து அழிந்து படாமல் காக்கவேண்டும் என்ற பரந்த நோக்கத்தில் அச்சிடப்பட்டுள்ள இந்த நூல்களின் வரலாறுகள், சுவடி திரட்டப்பட்ட உண்மையையும் புலப்படுத்துகின்றன.

அனை

சுவடியில் ஐந்திலக்கணமும் பல இலக்கியங்களும் எழுதப் பட்டுள்ளன. ஆனால் அவை அச்சிடப் பெறாமையால் வருக்கும் கிடைப்பதில்லை; அவற்றின் முழுப்பயனையும் தமிழுலகம் அடையவில்லை. எனவே ஏட்டுப்பிரதிகளில் மறைந்து கிடக்கும் அவற்றைத் தேடி அச்சிடுவதனால் தமிழ்நாடு பயனடையும் என்ற நோக்கத்தோடு கலித்தொகையும் இலக்கண விளக்கமும் அச்சிடப் பட்டன. 45

சிவன்பிள்ளை : பிங்கல நிகண்டின்

சுவடிகளை

மிகவும்

வருந்தித் தேடிப் பதிப்பித்த சிவன்பிள்ளையும் இப்பயன்பாட்டினை

வற்புறுத்திக் கூறுவார். அதாவது,

41. தாமோதரம், பக். 77.

43.

ஷை.

பக். 46.

44.

42. ஷை. பக். 68. ஷை. பக். 124.

45.

ஷை.

பக். 76-77.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/89&oldid=1571162" இலிருந்து மீள்விக்கப்பட்டது