உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

.

சுவடி இயல்

துகாறும் ஏட்டுப்பிரதி ரூபமாய்க் கற்றோர்பால் அருகி வழங்கி வந்தமையால் இது உபயோகமாய்ப் பலர்க்கும் பயன்படப் பல பிரதிகளைப் பலநாளும் வருந்தித் தேடிப் பல இடங்க ளினின்றும் பெற்று, ஆதி திவாகரம், கயாகரம் முதலிய நிகண்டு களையும் ஓர் பற்றுக்கோடாகக் கொண்டு வழுவறப் பரிசோதித்து அச்சிட்டிருக்கிறேன்” என்பது அவர் கருத்து.

கனகசபைப்பிள்ளை : அக்காலத்தில் சங்க இலக்கியங்களில் பெரும்பாலானவை அச்சில் வெளிவரவில்லை; ஏட்டுப் பிரதி களாகவே சிலரிடத்தில் அருகியிருந்தன. இவையின்றி இலக்கியக் கல்வியும் இலக்கிய ஆராய்ச்சியும் நடைபெற இயலாது. ஆகவே சென்ற இடங்களிலெல்லாம் அச்சில் வாராத தமிழ் நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தேடிப் பெறுகின்ற முயற்சியைக் முயற்சியைக் கைக் கொண்டார் கனகசபை பிள்ளை. 4

வே. சாமிநாதையர் : ஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் திருமயிலைத் திரிபந்தாதியைப் பார்க்க நேர்ந்தபோது, .அதைப் படித்துப் பார்த்துவிட்டு, படித்து இன்புற்று இந்நூலை அச்சிட்டால் தமிழ் படிப்பவர்களுக்கு நல்ல பயனை அளிக்கும் என்றார்களாம். அதனாலேயே அச்சுவடிகளைத் தேடித் திரட்டிப் பதிப்பித்ததாகக் கூறுவார் உ.வே.சா.4 8

பாரிசிலிருந்த ஜூலியன் வின்சோன் என்பவர் அனுப்பிய சுவடி களின் பட்டியலில் வில்லைப்புராணம் இருந்ததையறிந்த உ.வே.சா அதனை வரவழைத்துப் பதிப்பிக்க முனைந்தார். அப்புராணத்தின் தலமாகிய வில்வநல்லூரைத் தேடிக் கண்டுபிடித்தார். அதோடு அன்றி அவ்வூரிலும் பலரிடத்து விசாரித்து இலட்சுமி நாராயண ஐயர் என்பவர் மூலம் இரண்டு சுவடிகளைப் பெற்றார்.

4

சுவடியாகவே இருப்பின் அனைவராலும் கற்க இயலவில்லை யாதலின் அனைவரும் கற்றுப் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தால் பல நூல்கள் அச்சிடப்பட்டன என்பது மேற்கண்ட செய்திகளால் வெளியாகின்றது.

திருத்தப் பதிப்பிற்காகத் திரட்டுதல் சுவடிப் படிப்பில் தேர்ச்சியுடைய சான்றோர் பலர் அச்சுநூல்கள் வெளிவந்த பிறகும்

46. பிங்கல நிகண்டு, முகவுரை.

47. தமிழ்ச் சுடர்மணிகள், பக். 276. 48. திருமயிலைத்திரிபந்தாதி, முகவுரை. 49. வில்லைப்புராணம், முகவுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/90&oldid=1571163" இலிருந்து மீள்விக்கப்பட்டது