உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிவும் திரட்டுதலும்

75

சுவடிகளோடு ஒப்பிட்டுப் படித்தார்கள். அப்போது அச்சு நூல் களுள் பல விடுபட்டிருந்தன; பல பாட வேறுபாடுகள் இருந்தன. இவற்றை அறிந்து மேலும் திருத்தப் பதிப்பாக வெளியிடுதற்காக வும் சுவடிகளைத் திரட்டியிருக்கின்றனர்.

ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை : "பள்ளியூர் சேனை நாட்டா

ரவர்கள் ஒரு சுவடியைக் கொடுத்தார்கள். அப்பிரதியையும் அச்சாகியிருந்த புறநானூற்றையும் ஒப்பு நோக்கியதில்...சில பாட்டுகளில் அச்சுப்பிரதியில் விடுபட்டிருந்த சில அடிகளும் சிலவற்றில் சில திருத்தங்களும் காணப் பெற்றன" என்பார் ௧. துரைசாமிப் பிள்ளை. 50

“சீகாழி கோவிந்தசாமி ரெட்டியாரவர்கள் வை வத்திருந்த ஐங்குறுநூற்றுக் கையெழுத்துப் படியையும் அச்சாகி வெளிப் பட்டிருந்த ஐங்குறு நூற்றையும் ஒப்புநோக்கும் வாய்ப்புப் பெற்றேன். அப்போது அப்பிரதியில் காணப் பெறாத சில வேறுபாடுகள் கிடைத்தன. அதனால் டாக்டர் திரு. ஐயரவர்கள் முயற்சிக்கும் அகப்படாத நிலையில் ஏடுகள் பல தமிழ்நாட்டில் உள்ளன என்று ஐயம் தெளிந்தேன். இத்தெளிவால் பழைய ஏடு களைத் தேடுவதில் வேட்கையொன்று என் உள்ளத்தே கிளர்ந்

தெழுவதாயிற்று."

"ஞானாமிர்தத்துக்குரிய ஏடுகள் திருக்கோவலூர்த் தாலுகா

6 1

சிறுமதுரை (ஏனாதிவாடி)யினின்றும், திருநெல்வேலிக்கண்மையி லுள்ள இராசவல்லிபுரத்துச் செப்பறையினின்றும் பிறவிடங்களி னின்றும் கிடைத்தன”, என்னும் செய்திகள் ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளையின் பதிப்புக்களுக்குச் சுவடிகள் திரட்டப் பெற்றதன் காரணத்தைப் புலப்படுத்துகின்றன. இதே தே போல அச்சிட்ட புத்தகங்களிலுள்ள பிழைகளைத் திருத்திக் கொள்ளு வதற்கும், நல்ல பாடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுவதற்கு மாகவும் சுவடிகள் திரட்டப் பெற்றன என்னும் உ.வே.சா. அவர் களின் கூற்று திருத்தப் பதிப்புகளுக்காகவும் சுவடிகள் திரட்டப் பெற்றன என்பதை உறுதிப்படுத்துகின்றது. (அ)

61

எஸ். இராசம் வெளியீட்டுக் குழு, கம்பன் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகிய நிறுவனங்களும் சுவடி களைத் திரட்டித் திருத்தப் பதிப்பினை வெளியிட்டுள்ளன. 50.புறநானூறு, முன்னுரை, பக். V-VI. 51. (அ). என் சரித்திரம், பக். 920-921.

51. ஷை. பக். VI,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/91&oldid=1571164" இலிருந்து மீள்விக்கப்பட்டது