உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

சுவடி இயல்

இவ்வாறு சுவடிகள் அழியாமல் காத்தற்காகவும், கற்றற்காகவும், அச்சிடுதற்காகவும், ஆராய்ச்சிக்காகவும், திருத்தப் பதிப்பிற்காகவும் திரட்டப் பெற்றுள்ளன. அவ்வாறு திரட்டுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகளும், கையாண்ட முறைகளும் குறிப்பிடத் தக்கன. அம்முயற்சிகளில் தோல்வி கண்டோரும் உண்டு. தாமே விரும்பிச் சுவடிகளை அனுப்பி உதவியோரும் உண்டு.

தாமே சுவடிகளைத் தந்து உதவியோர் : சேலம் இராமசாமி முதலியார் சீவகசிந்தாமணிச் சுவடிக்காக ஸ்ரீவைகுண்டத்தில் முனிசீபாக இருந்த ஏ. இராமச்சந்திர ஐயரிடம் சொல்லி வைத் திருந்தார். ஐயரிடம் ஒரு வழக்கில் சாட்சியாக வந்த ஒருவர் கவிராயர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதையறிந்த ஐயர், அவரைத் தனியே அழைத்து, சீவகசிந்தாமணி ஏடு இருந்தால் கொண்டு வருமாறு கூறினார். அவ்வாறே அவர் கொண்டு வந்த போது, முப்பத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கி அதை ராமசாமி முதலியாருக்கு அனுப்பி வைத்தார். 52

சுவடிகளைத் திரட்டிப் பாதுகாத்தும், ஆள் வைத்து அவற்றைப் படியெடுத்தும் வைத்திருந்த வி. கனகசபைப் பிள்ளையவர்கள் பத்துப்பாட்டு. புறநானூறு, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியச் சுவடிகளை உ. வே. சா.வுக்குக் கொடுத்து உதவி புரிந்திருக்கிறார்.

58

திருநெல்வேலி ஸ்ரீமத்பால்வண்ண முதலியார், தன்நகரத்து நெல்லையப்பக் கவிராயரின் புத்தக சாலையிலிருந்து கன்னியா குமரித் தலபுராணம் என்னும் சுவடியைக் கண்டெடுத்து மு.ரா அருணாசலக்கவிராயரிடம் கொடுத்துப் பதிப்பிக்கச் செய்திருக் கிறார். 54

பழைய

ஏட்டுச்

வேலூரிலிருந்த வீரசைவராகிய குமாரசாமி ஐயரென்பவர்... விசாகப் பெருமாளையருடைய மருமகர். அவர் வித்துவான்களுடைய வீடுகளில் ஆதரவற்றுக் கிடக்கும் சுவடிகளை இலவசமாகவாவது, சிறு பொருள் கொடுத்தாவது அவ் வீட்டுப் பெண்பாலார் முதலியவர்களிடம் வாங்கி, விரும்பியவர் களுக்குக் கொடுத்து ஊதியம் பெற்றுக் காலக்ஷேபம் செய்பவர்...

52. ஷை. பக். 732-733. 53. தமிழ்ச்சுடர்மணிகள், பக். 276 54. கன்னியாகுமரித் தலபுராணம், முகவுரை, பக். 2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/92&oldid=1571165" இலிருந்து மீள்விக்கப்பட்டது