உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிவும் திரட்டுதலும்

77

அவர் பத்துப்பாட்டுப் பிரதியைக் கொண்டு வந்து உ. வே. சா. அவர் களுக்குக் கொடுத்திருக்கிறார். 55

சுவடிகளைத் தர மறுத்தவர்கள் : தஞ்சாவூர் விருஷபதாச முதலியாரிடம் உ.வே.சா. அவர்கள் நேரில் சென்று சீவகசிந்தாமணிச் சுவடியைக் கேட்டார். முதலியார் அதைப் பூசையிலிருந்து எடுக்கக்கூடாது என்று கூறிவிட்டார். பிறகு

என்று

மிகவும் பணிவாக வேண்டிக் கொண்டபோது, ஜைனர்களுக்குத் தான் கொடுப்பேன். மற்றவர்களுக்குக் கொடுக்கமாட்டேன் மறுத்துவிட்டார். மீண்டும் முதலியாருக்கு வேண்டிய நண்பர் ஒருவரை அழைத்துச் சென்றார் உ. வே. சா. அந்த நண்பர் 'கும்பகோணம் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்; திருவாவடுதுறை மடத்திற்கு மிகவும் வேண்டியவர்' என்று உ.வே.சா.வை அறிமுகப்படுத்தினார். உடனே சைவ மடத்தில் பழகினவருக்கு ஜைன நூலில் அன்பு ஏற்பட நியாயமில்லை; அந்நிய மதத்தவருக்குத் தருவது எங்கள் சம்பிரதாயத்துக்கு விரோதம்; எங்களுக்குப் பாவம் சம்பவிக்கும் என்று கூறி மறுத்து விட்டார். 5.5

அம்பாசமுத்திரத்தின் அருகில் இருந்த ஓர் ஊரில் அபிஷிக்தர் (சைவர்குரு) ஒருவரிடம் சுவடிகள் இருக்கின்றன என்பதைக் கேள்வி யுற்று உ. வே. சா. அவரிடம் சென்று கேட்டாராம். உ.வே.சா. சுவடிகளை அவ்வளவு சுலபமாகக் காட்டிவிட முடியுமா? இப்போதெல்லாம் அவற்றைத் தொடக்கூடாது. சரஸ்வதி பூசையில் தான் அர்ச்சனை பண்ணிப் பூசை செய்து எடுக்க வேண்டும் என்று கூறி விட்டாராம். 51

இவ்வாறு பலவாறாக முயற்சி செய்து தேடித் திரிந்தும், பணம் கொடுத்தும் சுவடிகளைத் திரட்டியிருக்கின்றனர். சுவடிகளைக் கொடுக்காமல் மறுத்தவர்களிடமிருந்து வெறுங்கையோடு திரும்பி யோரும் காணப்படுகின்றனர். சுவடிகளைத் திரட்டி ஆய்வு செய்து பதிப்பிக்கிறார் என்பதை அறிந்து, தாமே தம்மிடம் உள்ள சுவடி களைக் கொடுத்து உதவிய சான்றோரையும் காண முடிகிறது.

55. என்சரித்திரம், பக். 841. 56.

ஷை. பக். 766. 57. ஷெ. பக். 937.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/93&oldid=1571166" இலிருந்து மீள்விக்கப்பட்டது