உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

உ. சுவடிகளைத் திரட்ட வேண்டிய முறை

சுவடி இயல்

நூலைப்

எந்தப் பகுதி

தனியார் திரட்டும் முறை : ஒரு குறிப்பிட்ட பதிப்பிக்கும் பணியில் ஈடுபடும் ஒருவர் அந்த நூல் யில் வாழ்ந்த ஆசிரியரால் எழுதப்பட்டது? எந்தப் பகுதியில் பெரு வழக்காகக் கற்றுவரப்பட்டது? அல்லது கற்று வரப்படுகிறது? என்னும் செய்திகளை அறிய வேண்டும். அப்பகுதியில் உள்ள நண்பர்கள், சான்றோர்கள் ஆகியோர் மூலம் அச்சுவடிகளைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.

இக்காலத்து உள்ள வசதிகளைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட அல்லது தேவையான சுவடியைக் குறித்தோ பொது வாகவோ இதழ்களில் விளம்பரம் செய்து பெறுவதும் ஒருவழி யாகும். துண்டுத்தாள்களாக வேண்டுகோளாக அச்சிட்டுக் கிராமங்கள் தோறும் கிராம அலுவலர், ஆசிரியர், தக்க சான்றோர், ஆர்வமுடைய நண்பர் ஆகியோருக்கு அனுப்பி, அவர்கள் மூலம் செய்தியைப் பரப்பியும் அவர்கள் மூலமே செய்திகளைப் பெற்றும் அவர்கள் கருத்தின்படி அணுகலாம்.

அரசினர் அல்லது நிறுவனங்கள் திரட்டும் முறை : மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் கிராமங்கள் தோறும் தண்டோரா மூலம் தெரிவித்து வட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திரட்டி வைக்கச் செய்து, அவ்விடங்களுக்கு வல்லுநரை அனுப்பி விலை நிர்ணயம் செய்து பெற்று வருமாறு செய்யலாம்.

தாள்களில் விளம்பரம் செய்து உரிய நூலகங்கள் போன்ற நிறுவனங்களுக்கு அனுப்பி உரிய தொகையினைப் பெறச் செய்ய லாம். தமிழ்விழாக்கள், நூலக வார விழாக்கள், கண்காட்சிகள் முதலிய நிகழ்ச்சிகளுக்குச் சுவடிகளைக் கொண்டு வந்து காட்சியில் வைக்குமாறு விளம்பரம் செய்து அங்குவரும் சுவடிகளை ஆய்ந்து உரிய தொகை கொடுத்துப் பெற்று வரலாம்.

சோதிடக் கலையில் அரிய நூல்கள் தமிழ்நாட்டின் பல விடத்தும் நிறைந்து கிடக்கின்றன. உரியவர்களை நேரில் அணுகி, அவர்களைக் கவரும்படியான பணத்தைக் கொடுத்து அனைத்துச் சுவடிகளையும் திரட்டிப் பாதுகாக்கலாம்.

அரசு நிறுவனங்களில் தமிழ் வல்லுநர்களை, தமிழார்வம் உடையவர்களை, சிறப்பாகச் சுவடிப் பதிப்பில் அனுபவமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/94&oldid=1571167" இலிருந்து மீள்விக்கப்பட்டது