உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிவும் திரட்டுதலும்

79

ஆர்வமும் உடையவர்களைத் தலைவர்களாக நியமித்தலும், சுவடி களை விலைக்கு வாங்குவதில் அவர்களுக்கு முழுஉரிமையளித்தலும் சுவடி திரட்டுவதில் நல்ல பயனை லிளைவிக்கும்.

தனியாராயினும் அரசு நிறுவனங்களாயினும் தமிழரின் அரிய கலைகள் பொதிந்த சுவடிகளைத் திரட்டுவதில் கணிசமான தொகையைச் செலவழிப்பதே இக்கால நிலைக்கும், இக்கால நாட்டு நிலைக்கும் பொருந்துவதாயமைந்து முழுப்பயனை அளிக்கும்.

மேலைநாட்டு அறிஞர் நம்நாட்டுக்கு வந்து களஆய்வுப் பணியை மேற்கொள்ளுவதன் மூலம் சுவடிகளை -- மூல ஏடு களையே - பெற்றுச் செல்லுகின்றனர். இந்த முயற்சியில் அவர் களுடைய எண்ணம் ஈடேற நம்மவரிடம் வேரூன்றியிருக்கும் பாமரத்தன்மையும் வறுமையும் அவர்களுக்குத் துணையாகி விடுகின்றன என்று கூறும் அ. தாமோதரன் அவர்களின் கருத்து சுவடி திரட்டுவோர் நினைவு கூரத்தக்கதாகும்.

சுவடி திரட்டுதலின் பயன்

பழங்காலச் சுவடி திரட்டும் செயலின் பயனாகத்தான் தொகை நூல்கள் நமக்குக் கிடைத்தன. அச்சு வசதி ஏற்பட்டதன் பின் சான்றோர் திரட்டியதன் பயன் இன்றைய பதிப்புகள் நம்மிடை நிலவுகின்றன. மேலும் திரட்டுவதனால் அச்சாகாத சுவடிகளும் வெளியிடப்படுதல் வேண்டும்; மேலும் சிறந்த

பதிப்புகள், ஆராய்ச்சிப் பதிப்புகள் தோன்றுதல் வேண்டும். இவை சுவடி திரட்டுதலின் பயனாகும் என்பது இப்பகுதியில் ஆய்வு செய்யப் பெறுகிறது.

எழுத்து வடிவம் பெற்றுப் பலவிடத்தும் முடங்கிக் கிடந்த தமிழ்ச் சுவடிகளைத் தொகுத்ததன் பயனாக நமக்குக் கிடைத்தவை பாட்டும் தொகையும் கீழ்க்கணக்கு நூல்களுமாகும். தொகுக்கப் பெற்ற இந்நூல்கள் மீண்டும் புதிய, புதிய ஏடுகளில் ஆங்காங்கு முடங்கிக் கிடக்கும் நிலையையே பெற்றன.

ஏறி

சென்னைக் கல்விச் சங்கத்தினர் காலம் தொடங்கி இன்று வரை நிறுவனத்தினரும் தனிப்பட்டவர்களும் சுவடிகளைத் தேடித்

58. லண்டன் தமிழ்ச்சங்க ஆண்டுமலர், பக். 49.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/95&oldid=1571168" இலிருந்து மீள்விக்கப்பட்டது