உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

சுவடி இயல் திரட்டிப் பதிப்பித்து வருவதனால் சுவடிகள் காக்கப் பெறுகின்றன. சுவடிச் செல்வங்கள் பலர் கைக்கும் நூல்களாக எட்டிப் பயன் தந்து வருகின்றன.

இன்றைய நிலையிலும் அனைத்துச் சுவடிகளும் அச்சு இயந்திரத்தைக் கண்டுவிட்டன என்று கூறமுடியாது. ஒவ்வொரு சுவடியும் நூல் வடிவில் நம்மிடையே உலவ வேண்டும். இந்நோக் கத்தைமுழுமை செய்வதே இனியும் சுவடிகள் திரட்ட வேண்டு வதன் முக்கியமான பயனாகும்.

6

கிடைக்கும் சுவடிகள் அச்சானவை : சுவடி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு அதனால் பெறும் பயனாக—அச்சான நூல் களின் சுவடிகளே கிடைக்கலாம். அவற்றிலும் அந்நூலின் மூலம் மட்டும் கிடைக்கலாம்; அல்லது அதன் உரைமட்டும் கிடைக்கலாம். அவ்வுரையும் அச்சானதாக இருக்கலாம்; அல்லது புதிய உரையாக வும் இருக்கலாம். அவை முழுமையாக அல்லது அல்லது ஒரு சில, பல பகுதிகள் மட்டும் உள்ள, முதலும் முடிவுமில்லாத, இடையிடையே சில பகுதிகள் இல்லாத தன்மையுடைய குறையான சுவடிகளாகவும் இருக்கலாம். கிடைத்த அளவிலும் சுவடி தூய்மையுடையதாக, எழுத்துத் தெளிவானதாக இருக்கலாம்; அல்லது இருநிலையிலும் மாறுபட்டதாகக் கிடைக்கலாம்.

பேரூர்க் கோவை : சி.எம்.இராமச்சந்திரன் செட்டியார் பேரூர்க் கோவையினைப் பதிப்பித்தபோது, அந்நூலுக்குரிய மூன்று சுவடிகள் கிடைத்தன. இந்த மூன்று பிரதிகளிலும் நூல் முழுமையு மாக எழுதப் பெறவில்லை. நாளது வரை முந்நூற்று அறுபது பாடல்கள் மட்டுமே கிடைத்தன என்று அவர் தம் முன்னுரையில் குறிப்பார். 5 9

புறநானூறு : புறநானூற்றினைப் பதிப்பிக்க உ.வே.சா.வுக்குப் பல சுவடிகள் கிடைத்தன. அவற்றுள் "சில முதற்பாகங் குறைந்தும், சில இடைப்பாகங் குறைந்தும், சில கடைப்பாகங் குறைந்தும்... இன்னும் பலவகைப்பட மாறியும் கையெழுத்துப் பிரதிகள் இருந்தன".6°

சீவகசிந்தாமணி: சீவகசிந்தாமணியைப் படித்தபோது தம் ஆசிரியரின் சுவடியையும், சேலம், இராமசாமி முதலியார் கொடுத்த சுவடியையும் வைத்து ஒப்பிட்டுப் படித்துள்ளார்கள். முதலியார்

59. பேரூர்க்கோவை, முகவுரை. 60. புறநானூறு, முடிவுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/96&oldid=1571169" இலிருந்து மீள்விக்கப்பட்டது